உலகின் உயரமான இடத்தில் சாலை ! சாதனை படைத்த மோடி அரசு! சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்தியா!

இந்தியாவில், லடாக்கில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள சாலை என்ற சாதனையை ப்டைத்துள்ளது இந்தியா. இதன் மூலம் லடாக்கில் சுற்றுலா மேம்படுத்தப்படுவதோடு, இப்போது வாகனங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளை உம்லிங்லா (Umlingla Pass) பாஸ் வழியாக இணைக்கிறது.

இந்தியாவின் எல்லை புறங்களில் சாலை வசதிகளை செய்து வரும் இந்திய ராணுவத்தின் BRO பார்டர் ரோடு ஆர்கனி சேசன் உலகின் மிக உயரத்தில் சாலை அமைத்து உலக சாதனை படைத்து இருக்கிறது.
உலளவில் பொலிவியா நாடு தான் மிக அதிகமான உயரத்தில் அதாவது 18,953 அடி உயரத்தில் சாலை அமைத்து இருந்தது

இந்தியா அமைத்துள்ள சாலை சீனாவின் மிக அருகில் உள்ள கிழக்கு லடாக்கில் உள்ள உம்லிங்கலா கணவாய் அருகே அமைந்துள்ளது. 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 19,300 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது குளிர் காலங்களில் -40 டிகிரி வெப்ப நிலையும் சாதாரண காலத்தில் 0 டிகிரி வெப்பநிலையும் உள்ள எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் ஆக்சிஜன் அளவு மற்ற இடங்களை விட பாதியாக தான்
இருக்கும்.

இந்த பகுதிகளில் இந்தியா சாலை அமைத்து உலக சாதனை படைத்து இருப்பது பெயர் வாங்குவதற்கு அல்ல.மாறாக தொட்டு விடும் தூரத்தில் உள்ள சீனாவை மிக விரைவாக தொட்டு விட வேண்டும்என்பதற்காக தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீனா வலி மையாரன நாடு அவரகளிடம் உள்ள பணபலத்தினால் எல்லை பகுதிகளில் கட்டுமானபணிகளை செய்கிறார்கள்.

ஆனால் நம்மிடம் பணம் இல்லை அதனால் அவர்கள் செய்வதை வேடிக்கை தான் பார்க்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் இப்பொழுது மோடி ஆட்சியில் சீனா வேடிக்கை பார்க்க இந்தியா எல்லைப்புறங்களில் சவாலான இடங்களில் சாலை வசதிகளை அமைத்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள்.

Exit mobile version