இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை மூன்று நிலைகளில் முடிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ரயில்வே பெரிய அளவில் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணித்திட்டத்தின் மூலம் 1.4 லட்சம் காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். இதற்கு 2 கோடி 44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியன் ரயில்வே ஆட்சேர்ப்பு பணிகளை டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தற்போது ரயில்வே முடித்துள்ளது. கோவிட் நெறிமுறை தேர்வு மையங்களில் முழுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் பங்குகொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதையும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிபடுத்தும் ஒரு அறிக்கையையும் அவர்கள் அளிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு அறிக்கை அளிக்காதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது.

ஆட்சேர்ப்பு செயல்முறை மூன்று கட்டங்களில் முடிக்கப்படும்:

1. முதல் கட்டத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும். இது அமைச்சக பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

2. இரண்டாவது தேர்வு சிபிடி, அதாவது நான் டெக்னிகல் பாப்புலர் பிரிவுக்கான சிபிடி இரண்டாம் கட்ட தேர்வாகும். இது டிசம்பர் 28, 2020 முதல் மார்ச் 2021 வரை நடக்கும்.

3. மூன்றாவது கட்டம் ஏப்ரல் 2021 இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபிடி லெவல் 1 க்கான தேர்வாக இருக்கும். இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை நடக்கும்.

தேர்வு எழுத வரும் அனைவரும் RRB, அதாவது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

Exit mobile version