75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தில்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார். பின்னர் 75-வது தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.
பிரதமர் மோடி அவர்களின் சுதந்திர தின உரை:
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கோவிட் ஒழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். கோவிட் தடுப்பூசி நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதால் பலரும் இன்று பலன் அடைந்துள்ளனர். சப்கா ஷாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்
புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். காதி உற்பத்தியை பெருக்க வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும். உற்பத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிரதமர் கதி சக்தி திட்டம் 100 லட்சம் கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்படும்.
இந்தியா மட்டும்தான் தனது காலநிலை இலக்குகளை அடையும் பாதையில் உள்ளது 21-ஆம் நூற்றாண்டில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்
ரம்ஸார் அங்கீகார பட்டியலில் மேலும் 4 இந்திய பகுதிகள் இடம்பெற்றிருப்பது நமக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம்
தேசிய பாதுகாப்புக்கு இணையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கின்றோம். பல்லுயிர் அல்லது புவிச் சமநிலை , காலநிலை மாற்றம் அல்லது கழிவு மறுசுழற்சி, இயற்கை வேளாண்மை, போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது எரிசக்தியில் இந்தியா தன்னிறைவுப் பெறவில்லை.
எரிசக்தி இறக்குமதிக்காக ரூ.12 லட்சம் கோடி செலவிடுகிறோம். சுதந்திரத்தின் 75 ஆண்டைக் கொண்டாடும் போது, எரிசக்தி உற்பத்தியிலும் இந்தியா தற்சார்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் தேசிய பாதுகாப்புக்கு இணையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கின்றோம். பல்லுயிர் அல்லது புவிச் சமநிலை , காலநிலை மாற்றம் அல்லது கழிவு மறுசுழற்சி, இயற்கை வேளாண்மை, போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது
பபட்டியலின வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அண்மையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெறும் சாதிகளை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.