2 மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்’ 90 கிட்ஸ்களின் சாபத்தை வாங்கும் காங்கிரஸ்..

congress

congress

நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் தோல்வி பயத்தால் காங்கிரஸ் என்ன பேசுவது என்ன வாக்குறுதி தருவது என தெரியாமல் புலம்பி வருகிறார்கள். 90 கிட்ஸ்கள்லாம் கல்யாணம் ஆகவில்லை என புலம்பி வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான காந்திலால் புரியா 2 மனைவி வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக வென்று பெரும்பான்மை யுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறியது. இதை எதிர்கொள்ளமுடியாமல் தோல்வி பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியினர். ஒரு பக்கம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி ராகுல் காந்தி மோடி என்னுடன் விவாதிக்க தயாரா என கேள்வி கேட்டு விவாதிக்க மோடி வரமாட்டார் என அவரே பதில் கூறினார். மோடியை பேட்டிக்கு அழைக்கும் ராகுல் காந்தி ஏன் மோடியை எதிர்த்து போட்டியிட்டுருக்கலாமே என பாஜகவினர் பதிலடி கொடுத்தார்கள். மேலும் ஸ்மிரிதி ராணிக்கு பயந்து அமேதி தொகுதியை விட்டு வயநாடு சென்றவர் தான் ராகுல் காந்தி என விமர்சனம் செய்யப்பட்டது.

அடுத்தது ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக இருந்த சாம் பிட்ரோடா. தனியார் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள். என சர்ச்சையை கிளப்பினார். இது பெரும் விவாத பொருளாகி அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

இதெல்லாம் ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானை மதிக்கவில்லை என்றால் அவர்கள் இந்தியா மீது அணுக்குண்டைப் போட்டுவிடுவார்கள் என பேசினார் இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அதன் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது . இல்லையென்றால் இந்தியா மீது பாகிஸ்தான் அணுக்குண்டை வீசுவார்கள் என பாகிஸ்தானை பெருமையாக பேசினார்.

இப்படி தொடர்ந்து சிக்கலில் சிக்கிவரும் காங்கிரசுக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா.சைலானா பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் பூரியா, ‛காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மனைவி வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியதோ இல்லையோ கல்யாணமாகாத 90 கிட்ஸ்களின் சாபத்தை வாங்கியுள்ளது காங்கிரஸ்.இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரே நேரத்தில் 2 மனைவி வைத்திருப்பது குற்ற செயலாகும். மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Exit mobile version