தமிழக பா.ஜ.க தலைவவராக முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டார். கோவையிலிருந்து கடந்த 14 ஆம் தேதி பாஜக தலைவராக பதவி ஏற்க புறப்பட்ட அண்ணாமலை அவர்களுக்கு வழியெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் பாஜகவினர் மட்டுமல்ல பொதுமக்களும் அண்ணாமலை யார் என கேட்க தொடங்கிவிட்டார்கள். பாஜகவினர் எப்போதும் தலைவர்களை வரவேற்க பெரிய அளவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது வழக்கம் இல்லை ஏனென்றால் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க கூடாது . போக்குவாரத்து பிரச்சனைகள் வரக்கூடாது என அடக்கி வசிப்பார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக பாஜகவின் வளர்ச்சி தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி வேல் யாத்திரை பட்டி தொட்டியெங்கும் பேச வைத்தது.
இந்த நிலையில் பாஜக தலைவராக இருந்த முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி அளித்தது பிரத்மர் மோடி தலைமையிலான அரசு. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவராக, முன்னாள் IPS அதிகாரியான அண்ணாமலையை, அக்கட்சியின் தேசிய தலைமை நியமித்தது.20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இது பா.ஜ.கவினருக்கு புது தெம்பை அளித்துள்ள நிலையில் அண்ணாமலையை தலைவராக்கியது மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலையின் அறிவிப்பு வெளியானதும், பா.ஜ.க வினர், இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் சமுக வலைத்தளங்களில் அண்ணாமலையின் ராஜ்ஜியமானது. பாஜகவினர் மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர் அண்ணாமலை தலைவரானதுக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில், அண்ணாமலையே மிகவும் இளையவர். என்பதாலும் ஒரு IPS அதிகாரி என்பதாலும் இவர் மீது எதிப்பார்ப்பு அதிகமானது. கர்நாடகாவில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியயவர் தான். அதனால் அண்ணாமலையின் மீதான தாக்கம் பாஜகவினர் மற்றும் திமுக அதிமுக கட்சியினரிடையே எகிறியது.
பாஜகவின் தலைவர் பொறுப்பேற்க, அண்ணாமாலை, கோவையில் இருந்து, 14ம் தேதி காலை கிளம்பினார். வழிநெடுக ஒவ்வொரு நகரின் எல்லையிலும், திரளாக கூடிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பூக்களை துாவி, ‘கட் அவுட்’ வைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றபடி, நேற்று முன்தினம், சென்னை வந்த அண்ணாமலை,
தியராக நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றார். அவரை வரவேற்று, சென்னையில், அண்ணா சாலை, காமராஜர் சாலை என, அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அண்ணாமலை படங்கள் அச்சிடப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களை, பா.ஜ.,வினர் ஒட்டினர். கமலாலயம் அமைந்துள்ள சாலையில் வாழை மரம், தோரணம் கட்டி, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க., – அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது, ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிப்பது போன்று, பா.ஜ.க வினர், அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். அண்ணாமலைக்கு கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் போஸ்டர்கள், அனைத்தும் உளவு துறையினால் சேகரிக்கப்பட்டு ஆளும் கட்சி தலைமைக்கு கொடுத்துள்ளது உளவுத்துறை. இதில் முக்கிய அம்சம் அண்ணாமலை பற்றி பொது மக்களும் பேசி வருகிறார்கள் என்பது திராவிட கட்சியினரை திகைக்க வைத்துள்ளது.