கிறிஸ்துவ மதபோதகர் வழக்கில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தைச் சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதி!

‘ருத்ர தாண்டவம்’ படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம்.

சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்.

திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.

திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக . தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எந்த விதமான சமூக பிரச்சனையை கையில் எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இணையத்தில் ருத்ரதாண்டவம் ட்ரைலர் கலக்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பெரிய நடிகர்களை மட்டும் கொண்டாடி வந்த நிலையில் தற்போது ருத்ரதாண்டவம் கொண்டாடப்பட்டது.

நாடக காதல் கதைகளாத்தை மையமாக வைத்து ‘திரெளபதி’ படத்தை இயக்கிய மோகன் ஜி அதையடுத்து மதமாற்ற அரசியல் கதைக்களத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இரண்டாவது முறை ரிச்சர்ட் ரிஷியுடன் அவர் கூட்டணி அமைத்தார். படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

ருத்ர தாண்டவம் படத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் சலுகைகளுக்காக பழைய மதத்தின் அடையாளத்தையே பயன்படுத்தும் அரசியலை காணிப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கருத்துக்கள் எழுந்தன. 

இந்நிலையில் கிறிஸ்துவ மதபோதகர் ஜார்ஜ்பொன்னையா கைது விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி ருத்ரதாண்டவம் படத்தையும் ருத்ரதாண்டவம்  படத்தில் வரும் கிரிப்ட்டோ கிறிஸ்டியன் வசனத்தையும்  சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்துள்ளார்.

“இந்திய சினிமாவில் ஒரு படத்தை முன் வைத்து நீதிமன்றம் கூறும் பெரிய தீர்ப்பு இது என்ற பெருமையை தேடிதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி.” என்று ருத்ர தாண்டவம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

souce TTN CINEMA

Exit mobile version