‛சேலம் பெரியார் பல்கலைகழகம் துணைவேந்தர் கைது நடவடிக்கையில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின்சதி உள்ளதாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் மண், என் மக்கள்’ மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,இன்று முதல் 4 நாட்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
என் மண் என் மக்கள் யாத்திரைக்காக சேலம் வந்தடைந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பின் போது : பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையால் தமிழக பா.ஜ.க வினர் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இது கட்சிக்கு பலம் சேர்க்கிறது. பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழக மக்களுடன் அவர் இணைத்துள்ளதை காட்டுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்து ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தலைகுனியக்கூடிய அளவில் சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது சம்பவம் நடந்துள்ளது. துணைவேந்தரின் கைதில் காவல்துறையின் செயல்பாடு சரியில்லை. சாதி பெயர் கூறிய திட்டியதாக முகாந்திரமே இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து கொண்டு 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் சுற்றியது ஏன்?.
துணைவேந்தர் ஜெகநாதன் கைது ,பொன்முடி சொல்லி கொடுத்து தான் நடந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைகழக 5 ஆண்டுகளாக பதிவாளர் இல்லாமல் இயங்கி வந்தது.தற்போது துணைவேந்தர் மீது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் கைது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும் என தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.