நம்ம சாம்சங் போன் டிஸ்பிலே எல்லாம் இனி இந்தியாவிலியே தயார் ஆகிறது இதுவரை சீனாவில் தயாரித்து உலகம் முழுவதும் போய் கொண்டு இருந்த சாம்சங் போனின் Display manufacturing Unit முழுவதுமாக நம் நாட்டின் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஷிபிட் ஆக போகிறது .
அதற்கான கட்டுமான பணி நொய்டாவில் முழுவுதுமாக நிறைவடைந்து விட்டது .சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியா பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு உத்திர பிரதேச முதல்வர் யோகியை நேற்று சந்தித்து பேசியுள்ளனர்
மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கிலான தற்சார்பு இந்தியா திட்டத்தின் பலனாக, பிரபல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் (Samsung) உத்தரபிரதேசத்தில் (உ.பி.) மொபைல்கள் மற்றும் டேப்களுக்கான டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் உற்பத்தி பிரிவை, சீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியா பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பேசியது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தொழில் துறையினருக்கான உகந்த சூழல் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் காரணமாக, சீனாவில் (China) அமைந்துள்ள டிஸ்ப்ளே உற்பத்தி பிரிவை உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நிறுவ சாம்சங் முடிவு செய்தததாக கூறப்பட்டுள்ளது. மேலும்
உத்திர பிரதேச முதல்வர் யோகி அவர்கள் இந்த நடவடிக்கை ” சாம்சங் நொய்டா பேக்டரி ” Make In INDIA” இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழும் .இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை அள்ளி கொடுக்கும் ..” என தெரிவித்துள்ளார்கள்