சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம்,தெள்ளார் ஒன்றியம்,சி.ம.புதூர் ஊராட்சியில் உள்ள,அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்நேசன்,கல்வியாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் மதிழயகன் கலந்துகொண்டு,பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கங்கள்,தேவைகள்,கடமைகள்,பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி,பெற்றோர் செயலில் உள்ளீடு செய்யும் வழிமுறைகள் குறித்தும்,மலர்க்கேணி செயலின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கினார்.

இந்நிகழ்வில் உடன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் துணைதலைவர் துர்காதேவி ஆகியோர் நன்றி கூறினர்.

Exit mobile version