உலகம் முழுவதையும் தற்போது ஆட்டிப்படைத்து வரும் கொடிய உயிர்க்கொல்லியான கோவிட்-19 தொற்றைக் கண்டறிந்து, தடுப்பது, குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையிலான சிகிச்சை முறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, மொஹாலியில் உள்ள டிபிடி – சிஐஏபி மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
வேதியியல், வேதி பொறியியல், உயிரி தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல், ஊட்டச்சத்து, நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான ஆராய்ச்சி பின்புலம் கொண்ட தனது விஞ்ஞானிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருந்து கண்டுபிடிப்பு தளத்தின் கீழ், பழங்களின் தோல் மற்றும் விதைகளில் இருந்து மதிப்பு மிக்க மருத்துவக் கூறுகளைப் பிரித்தெடுக்கும் சிகிச்சைக்கான வாய்ப்புகளைக் கண்டறியவும், இயற்கையான பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தி, சார்ஸ் கோவ் 2 தொற்று பரவுவதைத் தடுக்கும் ஏசிஇ 2 என்னும் புரதத் தடுப்பை உருவாக்கவும், இந்த ஆராய்ச்சி உதவும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















