கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9ம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் ஏற்படுவதால், வடகிழக்கு பகுதியான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஜூலை 9ம் தேதி முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதத்துடன் கூடிய காற்று, ஜூலை 8-ம் தேதியிலிருந்து கிழக்கு இந்தியாவுக்கு படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளது. இது ஜூலை 10-ம் தேதிக்குள் பஞ்சாப் மற்றும் வடக்கு ஹரியானாவுக்கு பரவ வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தில்லிக்கு ஜூலை 10-ம் தேதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

 இதன் காரணமாக மத்திய இந்தியா பகுதியில் மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூலை 8-ம் தேதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வடமேற்கு இந்தியாவில் ஜூலை 9-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். உத்தராகண்ட்டில் 8ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 9ம் தேதியில் இருந்தும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூலை 10-ம் தேதியில் இருந்தும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version