காவல்துறைக்கு பயந்து மண்டியிட்ட சீமான் தம்பி சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் என்பவர், ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு சென்று தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக்டாக் செய்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மண்டியிடாத சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்து புதைத்தது தமிழர்கள் தான் என்று மேடையில் முழங்கினார்.

அதற்கு ஒருபடி மேலே போய் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளரான சாட்டை துரைமுருகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கே சென்று, தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று அவரை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ பதிவிட்ட சாட்டை துரைமுருகன் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், மேடைக்கு மேடை மண்டியிடாத மானத்துக்கு சொந்தகாரர்கள் என சூளுரைக்கும், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான துரைமுருகன் காவல்துறைக்கு பயந்து கொண்டு ஒரு மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். ராஜிவ் காந்திஇடம் மண்டியிட்ட நாம் தமிழர்

ஏற்கனவே ஒரு பெண்ணை வந்தேறி என்று சாதி ரீதியாக இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்டதால் துரைமுருகன் , நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி: பாலிமர் செய்திகள்

Exit mobile version