சீமானுக்கு இல்லை விவசாயி சின்னம்…… தேர்தல் ஆணையம் அதிரடி…

Seeman

Seeman NTK

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேர்தல் ஆணையமும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.கட்சிகளுக்கு சின்னம் வழங்குதல், தேர்தல் விதிமுறைகள் என தேர்தலுக்கான பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டுவருகிறது தேர்தல் ஆணையம். மேலும் அரசியல் கட்சிகள். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கான சின்னங்ளை விண்ணப்பிக்கும் பணிகளும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை டெய்சியை புலனாய்வு முகம் NIA விசாரித்தநிலையில் தற்போது தேர்தல் ஆணையம் நம் தமிழர் கட்சிக்கு பேரிடியை இறக்கி உள்ளது அதிர்வே அடங்காத நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி கர்நாடகாவை சேர்ந்த கட்சியாகும். தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வழக்கமாக போட்டியிடும் அதாவது கரும்பு விவசாயி சின்னம். என ஆவலோடு இருந்தது நாம் தமிழர்கட்சி

ஆனால் இந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதால் சீமான் அதிர்ச்சியில் உள்ளார். இப்போதுதான் என்.ஐ.ஏ, விசாரணை, தற்போது சின்னம் முடங்கும் அபாயம் என அடுத்தடுத்த நாம் தமிழர் கட்சிக்கு அடி அடி மேல் விழுகிறது. ’

மேலும் சின்னம் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையிட உள்ளார். அங்கு முறையிட்டும் அந்த சின்னம் கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளதாக நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சென்றாலும் உடனடியாக முடிவெடுத்து நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலை உள்ளது.

என்.ஐ.ஏ, சின்னம் முடங்கும் அபாயம் என அடுத்தடுத்த ’செக்’ கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளன. சின்னம் விவகாரம் பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகமும் நா.த.க-வினர் மத்தியில் கிளம்பியிருக்கிறது.

Exit mobile version