காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! விநாயகர் வழிபட்டிற்கே தடை விதிப்பார்களோ?

கரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்து மக்கள் மிகவும் விழிப்புணர்வுவாக இருக்கிறார்கள். அதனால் எந்தக் கட்டுப்பாடுகளும் அவசியம் இல்லை.

திருமண மண்டபங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது இதையெல்லாம் அரசாங்கம் கண்காணிப்பு செய்யாமல் ஏதோ நகரம் மற்றும் கிராமங்களில் பொது மக்கள் விநாயகர் சிலையை வைக்கிறார்கள். அதற்கு கட்டுப்பாடுகளுடன் சிலை வைக்க அனுமத்திக்கலாம்.

டாஸ்மாக் மெரினா மால் என மக்கள் கூடும் இடத்தை திறந்து விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிப்பது உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள். இந்து அமைப்புகள்.

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் விநாயகர் செய்து வழிபடலாம்
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவிப்பு.

மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாக மேற்பார்வையில் இருக்கும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் விநாயகர் சதுர்த்தி நடத்த தடை இல்லை என்பதை திமுக அரசு நினைவிற் கொள்ள வேண்டும் மத்திய அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் தடை என பேசுவது சப்பை கட்டு காட்டுகிறார்கள்.

சென்னை தாம்பரம் பகுதியில் விநாயகர்சதுர்த்தி கொண்டாடுவதற்காக வீடுதோறும் வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் திருமேனிகளை தாம்பரம் தாலுகா வருவாய்த்துறையினர் காவல் ஆய்வாளர் திரு சார்லஸ் தலைமையில் பறிமுதல் செய்துள்ளனர்.

காரணம் கேட்டால் விநாயகர் நிறைய இருக்கிறது என்று சொல்கிறார்களாம்.ஒருவருடைய வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைகளை எந்தவிதமான அனுமதியும் இன்றி அத்துமீறி நுழைந்து பறிமுதல் செய்த இந்த இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது திமுக அரசு.

செல்ல செல்ல விநாயகர் வழிபாட்டுக்கே தி.மு.க அரசு தடை விதிக்கும் போல.

Exit mobile version