செந்தில் பாலாஜி வழக்கு அடித்து நொறுக்கும் அமலாக்கத்துறை! அடுத்த ரெய்டுக்கு ரெடி! பீதியில் பினாமிகள்!
அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களில் மூன்று நாட்களாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி தொடர்புடைய 60 நில ஆவணங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். 16.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் திமுக அமைச்சர் செந்திலை பாலாஜி யின் நண்பர் பல முக்கிய ஆவணங்களை, மறைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.அமலாக்க துறை.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை விசாரணை தீவிரம் பெற்றுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் செந்தில் பாலாஜி வழக்கில் பல திருப்பங்கள் நடந்துள்ளது. விசாரணை தோண்ட தோண்ட கணக்கில் வராத பல கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் , திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தெற்கு தி.மு.க., ஒன்றிய செயலருமான சாமிநாதனிடம், சட்டவிரோத வருமானத்திற்கான ஆவணங்கள் இருப்பதும், அவற்றை மறைக்க முயன்றதையும், அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மீண்டும் அதிரடியில் இறங்கியது அமலாக்கத்துறை. கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம். சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது நிறுவனம்; கோவை ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துபாலன் வீடு. ஒன்றிய செயலர் சாமிநாதன் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட ஒன்பது இடங்களில், அமலாக்கத் துறையினர் கடந்த 3ம் தேதி முதல் சோதனை நடத்தினர்.நேற்று பிற்பகல் வரை நீடித்த இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
செந்தில்பாலாஜியின் யார்யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் வெளிநாடுகளில் முதலீடு திமுகவின் முக்கிய புள்ளிகளிடம் பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமலாக்கத்துறை. வட்டரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக செந்தில் பாலாஜியிடம் பணம் பணப்பரிமாற்றம் செய்தவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அமலாக்கத்துறை.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஒன்பது இடங்களில், சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, அவரது நெருங்கிய நண்பர் சாமிநாதன், ஆவணங்களை மறைக்க முயற்சி செய்தார். ஆவணங்கள் இருந்த பையை, சாமிநாதனின் உறவினர் சாந்தி எடுத்து சென்றார்.
பின், அந்த பையை, ஓட்டுனர் சிவாவிடம் கொடுத்ததும், ‘சிசிடிவி’ கேமரா வாயிலாக தெரியவந்தது.
ஓட்டுனர் சிவா வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் தலைமறைவாகி விட்டார். அவரது மொபைல் போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.சாமிநாதனின் உறவினர் சாந்தி மற்றும் ஓட்டுனர் சிவா வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம்; 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், 60 நில ஆவணங்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
இல்லத்தரசியான சாந்தி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரிடம் வருமானத்திற்கான ஆதாரங்களும் இல்லை; அதே நேரம், சாமிநாதனின் பினாமியாக செயல்பட்டுள்ளார். தொடர்ந்து, சாந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், நில ஆவணங்கள் அனைத்தும், செந்தில் பாலாஜியின் கூட்டாளியான சாமிநாதனுக்கு சொந்தமானவை என தெரிய வந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வலுவான ஆதாரங்களை, அமலாக்கத் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதன் வாயிலாக, அவரது கூட்டாளிகள், உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவர் என தெரிகிறது. இந்த ஆதாரங்கள், செந்தில் பாலாஜி வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என, அமலாக்கத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்புடைய ஒன்பது இடங்களில் சோதனை நடத்தியது குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டசபை உறுப்பினர் செந்தில் பாலாஜி’ என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமைச்சர் என்ற வார்த்தையை அமலாக்கத் துறை தவிர்த்து உள்ளது.
இரண்டாம் கட்ட சோதனை நிறைவு செந்தில் பாலாஜி, அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் தலா இரண்டு கட்டமாக சோதனை நடத்தியுள்ளனர். மூன்றாம் கட்ட சோதனையும் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், பொத்தனுாரைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் காளியப்பன், 70, வீடு, ‘டயர்’ நிறுவனங்கள் மற்றும் அவரது மகள் பிரியங்காவிடம், மூன்று நாட்களாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணி வரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களின் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அடுத்த கட்ட விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.