Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அமைச்சர் பதவி செந்தில் பாலாஜி ராஜினாமா? உறுதி செய்த சட்டதுறை அமைச்சர்..

Oredesam by Oredesam
April 26, 2025
in செய்திகள், தமிழகம்
0
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி பெரும் தவறு செய்துவிட்டோம் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பதவியா? பிணையா? என்பதை முடிவு செய்து திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனக் கெடு விதித்தனர்.இந்த நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இதனால் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் மசோதா தாக்கல் செய்வார் என செந்தில் பாலாஜி பெயர் குறிப்பிட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோவை இன்று அறிமுகம் செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய இருப்பதாலேயே இந்த திடீர் மாற்றம் எனக் கூறப்படுகிறது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

செந்தில் பாலாஜி கைது
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சுப்ரீம் கோர்ட் கெடு
அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மற்றும் வித்யா குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அபய் எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வு விசாரணையின் போது திங்கட்கிழமைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில் பாலாஜி தெரிவிக்க கெடு விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

அமைச்சர் பதவிக்கு சிக்கல்
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதை அடுத்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும், சட்டம் முன்பதிவு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ள சாராயக்காரர்கள், கணினி வெளி சட்ட குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திருத்தச் சட்டம் முன் வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி ராஜினாமா உறுதி?
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா சட்டப்பேரவையின் இறுதி நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டம் ஆகும். அன்றைய தினம் செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தி.மு.க நிர்வாகியை கத்தியால் குத்திய தி.மு.க நிர்வாகி!  உட்கட்சி பூசலால் உடன்பிறப்பின் நெஞ்சில் பாய்ந்தது கத்தி!

தி.மு.க நிர்வாகியை கத்தியால் குத்திய தி.மு.க நிர்வாகி! உட்கட்சி பூசலால் உடன்பிறப்பின் நெஞ்சில் பாய்ந்தது கத்தி!

October 19, 2021
ponmudi ed

அமலாக்கத்துறை அதிரடி.. சிக்கலில் அமைச்சர் பொன்முடி..அடுத்தடுத்து அடிக்க காத்திருக்கும் அமலாக்கத்துறை

August 24, 2023
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வம்.

February 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x