அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது
அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி அண்மையில் கரூரில் உள்ள அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மேலும் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் குறித்து விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமின் கேட்டு வந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அனைத்து ஜாமீன்களையம் தள்ளுபடி செய்தது. புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பளத்துடன் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார்.இந்தநிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் நேற்று முதல் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தில் பாலாஜி மீது இந்த வழக்கு மட்டுமல்லபல்வேறு வழக்குகள் பதிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் இன்னும் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜி தம்பியால் தான் ஜாமீனும் கிடைக்கவில்லை இலாக்கா இல்லா அமைச்சர் பதவியும் இன்று இல்லை என புலம்பி வருகிறார் செந்தில் பாலாஜி. .இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. தம்பி அமலக்கத்துறையிடம் சரணடைந்தால் தான் ஜாமீன் பற்றியே செந்தில் பாலாஜி பேச முடியும்.அப்படியே அவறது தம்பி ஆஜரானால் பல முக்கிய தகவல்கள் அமலாக்கத்துறைக்கு கிடைக்கும். பல திமுக புள்ளிகள் சிக்கும் அதனால் செந்தில்பாலாஜியின் தம்பி அமலக்கத்துறை பிடியில் சிக்குவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதுவரை செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















