தாங்கள் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறோம் ஆனாலும் அன்னியர்களுக்கு சரண் அடைய மாட்டோம் என்கிறார்கள்தாலிபனுக்கு எதிராக போராடும் படையினர்.
ஊடகங்கள் வரிசையாக.பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் தாலிபான்கள் ஊடுருவிவிட்டதாகவும்,அப்பிராந்தியத்தை கைப்பற்றி விட்டதாகவும் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.ஆனால் உண்மையில் இன்னும் அங்கு வடக்கு கூட்டணியினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.
கடைசி ஒரு வீரர் உயிருடன் இருக்கும் வரை எதிர்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களின் செய்தி குறிப்பு ஒன்றில்.வடக்கு கூட்டணி, தாலிபான்களை தங்கள் பகுதிக்குள் உள் நுழைய விட்டு அவர்களை பலரை கொல்லாமல் சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சண்டையில். தாலிபனுக்கு ஆதரவாக சண்டையிட்டவர்கள் பாகிஸ்தான் பிரஜைகள் ஆகும். இதை வடக்கு கூட்டணி அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இது சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பலத்த எதிர்ப்பை தேடி தந்தது..
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் உளவு துறையினர் அதிரடியான காரியம் ஒன்றை செய்து இருக்கிறார்கள். அது ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு வேளையில் தனது துருப்புக்களை.ஆளில்லா விமானங்கள்,மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் களம் இறக்கி விட்டு உள்ளனர்.
போதாக்குறைக்கு ஆஃப்கானிஸ்தானிய ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்ட ஆஃப்கானிஸ்தான் முன்னாள் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த அம்ருல்லா ஸாலே தங்கியிருந்த வீட்டை குண்டு வீசி தகர்த்து எறிந்து இருக்கிறார்கள். அதிகாலையில் நடந்த இந்த சமயத்தில் அந்த வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்துவிட்டது .
நல்ல வேளையாக அவர் அந்த வீட்டில் இல்லாத காரணத்தால் அவர் உயிருடன் தப்பித்து இருக்கிறார்.
இது போலவே வடக்கு கூட்டணி படையினரின் தலைவரான அஹ்மட் மஸூத் தலைமையிலான முஹாஜின்கள் ஏராளமானோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தங்களை முதுகில் குத்திவிட்டதாகவும்.ஒரு சக இஸ்லாமிய தேசத்தை அவர்கள் இரவு நேரத்தில் மனிதாபிமானம் அற்ற முறையில் நிலைகுலைய செய்து விட்டதாகவும் அவர் தனது கடைசி ட்விட் தகவலில் தெரிவித்து இருக்கிறார்.
இது உலக அளவில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது… பாகிஸ்தானிலும் கூட பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கூடிய விரைவில் அங்கு பாகிஸ்தானில் உள் நாட்டு போர் மூளும் சூழல் உருவாகி இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
தெரிக் தாலிபான் எனும் பெயரில் இயங்கும் அமைப்பு பாகிஸ்தானின் இந்த செயலுக்கு மன்னிப்பு கிடையாது. பழிக்கு பழி வாங்குவோம் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்கள் வடக்கு கூட்டணி படையினரை ஆதரிப்பவர்கள்.
பாகிஸ்தானோ தங்களிடம் உதவி கோரிய தாலிபான்களுக்காக இதை செய்ததாக சொன்னாலும்.சட்டப்படி அமையப்பெறாத ஒரு இயக்கத்தினராக பார்க்கப்படும் தாலிபான்களை பல நாடுகளில் அங்கீகரிக்காத சூழ்நிலையில்… பாகிஸ்தானின் இந்த செயல் தீவிரவாதத்திற்கு துணை போனதாக பார்க்கப்படுகிறது.
இது சர்வதேச நீதிமன்றத்தில் குற்ற செயலாக அவதானிக்கப்படும் என்கிறார்கள் ஏற்கனவே பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் சாம்பல் பட்டியலில் உள்ள நாடாக பாகிஸ்தான் பலமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் கருப்பு பட்டியலுக்குள் அடைக்க இந்த சம்பவம் வழிவகை செய்து விடும் என்கிறார்கள்.
ஏற்கனவே உலக வங்கியில் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வேளையில் பாகிஸ்தானின் இந்த செயல் அவர்கள் நாட்டை திவால் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர் பலரும்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு காரணம் இந்திய எதிர்ப்பு என்கிறார்கள். இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வடக்கு கூட்டணி படையினரை பழி வாங்க தருணம் பார்த்து வந்த அவர்கள் சமயம் பார்த்து அதனை செய்து முடித்து விட்டார்கள் என்கிறது அங்குள்ள தகவல்கள்.
ஆனால் தேன் கூட்டில் கை வைத்து விட்டது பாகிஸ்தான் என்கிறார்கள் அவர்கள். ஏற்கனவே பாகிஸ்தான் தனது பலூசிஸ்தான் பகுதியில் உள்ளவர்களை.நிர்வகிக்க முடியாமல் திணறி வரும் இந்த வேளையில்.அதன் மீதான கொண்டு வர காத்திருக்கும் பொருளாதார வர்த்தக தடைக்கு வலுவான காரணத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டது.
இது அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களை பொங்கி எழ செய்திருக்கிறது. அங்கு உள்ள இந்த மக்கள் இந்தியாவோடு தங்களை இணைத்துவிட சுதந்திரம் பெற்ற சமயத்தில் இருந்தே போராட்டிக்கொண்டு இருப்பவர்கள். தற்போது அவை வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது.
வடக்கு கூட்டணி படையினர் வழியாக தனது பெயர் வெளியே வரக் கூடாது என்ற காரணத்தால் அகல கால் வைத்து மாட்டிக்கொண்டு விட்டது பாகிஸ்தான் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியா இதனை இனி சும்மா விடாது. ஏற்கனவே சட்டரீதியாக காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தானை அங்கு அகன்று செல்லுமாறு கெடு விதித்து தாக்கீது அனுப்பிய இந்தியா தற்போது அங்கு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வழி வகுக்கும் என்கிறார்கள் அவர்கள்.
பூகோள ரீதியாக இந்த பிராந்தியங்கள் அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட் பல்டிஸ்தான், வடக்கு கூட்டணி படையினரை கொண்டு பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதி, பலூசிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்து உள்ள பகுதிகளாக அமைந்துள்ளது.
தாலிபான்களுக்கு பயந்து ஏராளமான ஆஃப்கன் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தனிநாடு போல ஒன்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துவிடும் சாத்தியம் மிக மிக அதிகம் என்கிறார்கள்.
இது பாகிஸ்தானை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவத்தினை.கிழக்கு பாகிஸ்தான் பகுதியாக இருந்ததை பங்களாதேஷ் ஆக உருவாக்கி கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நினைத்து தற்போது அச்சம் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்.
இன்று உள்ள சர்வதேச அரசியல் சூழலில் இந்த திட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும் உலக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது நீண்ட கால நோக்கில் பல நாடுகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் என்பது அவர்களது கருத்து.
அதேசமயம் சீனா உள்நுழைந்து விடாமல் அதன் எல்லையிலேயே மடக்கி பிடிக்கும் மிகத் தந்திரமான நகர்வாக இது அவதானிக்கப்படுகிறது. ஆஃப்கன் பிரஜைகள் அகதிகளாக அவதியுறும் அவசியம் இதில் இல்லை.
சீனா தனது பொருளாதார பட்டுப்பாதை திட்டங்களை இந்த பிராந்தியத்தில் செயல் படுத்த முடியாது.
காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவும்.பாகிஸ்தான் உடைந்து பலூசிஸ்தான் பகுதியில் உள்ளவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும்.
மத ரீதியிலான பிரிவினை வாதிகளின் கொட்டம் அடங்கும். இஸ்லாமிய தீவிரவாதம் இனி நேரிடையாக இந்திய பகுதிகளை தாக்காது.என பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது தாலிபான்களை பாகிஸ்தானை மறைமுகமாக சீனாவை கதி கலங்க செய்து இருக்கிறது என்பது மாத்திரம் நிதர்சனமான உண்மை.பொருத்திருந்து பார்க்க வேண்டிய சமாச்சாரம் இது. கட்டுரை : வலதுசாரி கட்டுரையாளர் : ஸ்ரீராம்