தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம், மீண்டும் ரத்தம் பார்க்கத் துவங்கி இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அவர்களின் அச்சத்தைப் போக்க காவல்துறை லத்தியை சுழற்றி கட்டுக்குள்கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் பட்டப்பகலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடமாவட்டங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலில்இந்தக் கொலை எதற்காக நடந்தது? என்று விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு நிஜக்காரணம் தெரிந்ததும் அதிர்ந்து போயினர்.
வாணியம்பாடி நகரில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது இந்த வசீம் அக்ரம்தான். கடந்த ஜூலை 10ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் ரெய்டு நடத்தி கஞ்சாவை கைப்பற்றினர். கஞ்சாவைக் கைப்பற்றிய போலீஸார், கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட, கொலையாளிகளை பிடிக்க திணறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஓட்டேரி பிரசாத் என்கிற ரவியும், டில்லிகுமாரும் ரத்தக்கறை படிந்த பட்டாக் கத்திகளுடன் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரனையில் கஞ்சா விற்பனையைக் காட்டிக்கொடுத்ததால் டீல் இம்தியாஸ் ஏவிவிட்ட கதையைச் சொன்னார்கள். இம்தியாஸ் உட்பட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மற்றவர்களைத் தேட அவர்களில் 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைய அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகாசி கோர்ட்டில் இம்தியாஸ் சரணடைய அவரை வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டிருக்கிறார்.
சம்பவம் : 2
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை மேலப்பாளையத்தை அடுத்து வடக்கு கோபாலசமுத்திரம் தெற்கு கோபாலசமுத்திரம் என்ற கிராமம் இருக்கிறது.
இரு கிராமங்களுக்கும் அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கை இந்த மோதல்கள் மெல்ல மெல்ல பக்கத்து கீழச்செவல், மேலச்செவல், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் பரவி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், கீழச்செவல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கரசுப்பிரமணியன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கடந்த 13ம் தேதி இரவு வேலைக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வடுவூர்பட்டி ரோட்டின் இருட்டுப் பகுதியில் டாஸ்மாக் கடையை அடுத்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்திருக்கிறது. சட்டென அரிவாளால் அவரை வெட்டவே அதிர்ந்துபோன சங்கர சுப்பிரமணியன் டைக்கோடு தரையில் சரிந்தார்.
அவ்வளவுதான், அவரைசுற்றி வளைத்த அந்தக் கும்பல் கொத்திக் குதறி விட்டு அவரது தலையை மட்டும் அறுத்து எடுத்துக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டது. மறுநாள் காலையில் முன்னீர்பள்ளம் போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
உடனடியாய் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சங்கரசுப்பிரமணியனின் உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பிவிட்டு தலையை தேடி வந்தார்கள். அந்தத் தலை தெற்கு கோபாலசமுத்திரத்தில் உள்ள சுடுகாட்டில் மந்திரம் என்பவரதுகல்லறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மந்திரம் கடந்த 2013ம் ஆண்டு அவரது மகள் திருமணத்துக்காக வீட்டில் பந்தல், தோரணம் கட்டியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கிராமத்தினரின்இறந்தவரின் சடலம் கொண்டு சென்றபோது மந்திரம் வீட்டில் பூக்களை வீசியுள்ளார்
இதனால் டென்ஷனான மந்திரம் தட்டிக் கேட்டிருக்கிறார், அவ்வளவுதான். அதே இடத்தில் வெட்டி சாய்க்கப்பட்டார். அந்த கொலையாளிகளுக்கு சங்கர சுப்பிரமணியன் உதவி செய்திருக்கிறார். இதனாலேயே வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பதற்றம் அடங்குவதற்குள் பழிக்குப் பழியாய் அடுத்த 36 மணி நேரத்தில் இன்னொருவரை பழி தீர்த்துள்ளார்கள்.
“தெற்கு கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். 15ம் தேதி காலையில் வழக்கம் போல் டீ குடிப்பதற்காக பஜாருக்கு வந்திருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாய் அரிவாளால் வெட்டி வீழ்த்தியது.
அவரது இடது காலை துண்டித்த கும்பல், அவரது தலையையும் துண்டித்து எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு எடுத்த சபதத்தை முடித்து விட்டோம்’ என்று கோஷமிட்டபடி கலைந்து சென்றிருக்கிறது’
அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் இந்த கொலைகள் நெல்லையில் பெரும் பதற்றத்தைஏற்படுத்திவிட எஸ்.பி. மணிவண்ணன் ஸ்பாட்டில் முகாமிட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
சம்பவம் :3
செங்கல்பட்டு சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் காசிமேட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது. காசிமேடு ரமேஷ் மீது சென்னை, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வழக்கு ஒன்றிற்காக கடப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்த நிலையில்தான் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்நிலையில், கடப்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ரஞ்சித் குமார் என்பவரை ரமேஷ் உறவினர் தலையை தனியாக வெட்டி எடுத்துச் சென்று ரமேஷ்
கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் இதனால் பதட்டம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து பேசிய செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார், ரமேஷ் கொலைக்கும் ரஞ்சித்குமாருக்கும் சம்பந்தம் இல்லை. அவசரப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர். ரமேஷை கொலை செய்த 4 பேரைகைது செய்துவிட்டோம். ரஞ்சித்குமாரை கொலை செய்த கும்பலை தேடி வருகிறோம் என்றார்.
சம்பவம் : 4
திருச்சி கொட்டப்பட்டு எம்ஜியார் நகரைச் சேர்ந்த சக்திவேலுவுக்கும் பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அலெக்ஸுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செப்15 தேதி மாலை பொன்மலைப்பட்டி கடைவீதியில் சென்ற சக்திவேலுவின் தம்பி சின்ராசுவை அலெக்ஸ்
தரப்பு வெட்டி தலையை தனியாக எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலை எடுக்கும் கலாச்சாரத்தால் தமிழகம் நிம்மதி இழந்துள்ளது மறுக்க முடியாது. விடியல்ஆட்சி எண்டு வந்துவிட்டு விடிந்தால் தலை இருக்குமா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஊடகங்களோ பெரியார் வாழ்க என திமுகவிற்கு சொம்பு தூக்கி வருகிறார்கள்.