தமிழகத்தில் 13 லட்சத்திற்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தும், கடந்த 2 நாட்களாக கோவையில் ஒருவருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது தினமும் கிட்ட தட்ட 400 பேர் பலியாகி வருகிறார்கள்.கொரோனாவை தடுக்கும் முக்கிய ஆயுதம் தடுப்பூசி தான். ஆனால் அதில் அரசியல் செய்து வருகிறது திமுக.
ஆட்சிக்கு வருவதற்கு முன் தடுப்பூசி பற்றி தேவை இல்லாத சந்தேகங்களை கிளப்பியவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் . இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு கொரோன பெருந்தொற்று சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது திமுக அரசு. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடம் பெறுகிறது தமிழ்நாடு.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ என தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன். இந்த தகவல் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதால் திமுக அரசு பழி வாங்குகிறது என சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது.
இதே போன்று மராட்டிய அரசு, பூனே மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களித்தனர் என்பதால் பூனே மாநகருக்கு தடுப்பூசி தராமல் அலைய விடுகிறது. 2021 தமிழக தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க +அ.தி.மு.க கூட்டணி கைபற்றியது. அதற்கு பழி தீர்க்க கோவை மக்களுக்கு இந்த வஞ்சகம் இழைக்கப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் அளித்தே ஆக வேண்டும். என பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி .சூர்யா சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















