தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் சீரழிந்து விடும் என்பது உறுதி. அமெரிக்க ஆதரவு படைகள் இருக்கும் வரைசுதந்திரமாக வாழ்ந்த மக்கள் இப்பொழு து காட்டுமிராண்டிகளிடம் சிக்கி கொண்டார்கள்.
இது விதி.
அமெரிக்க அதிபர் பைடன் தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானை தாரைவரித்துவிட்டார். ஆப்கானை தாலிபான்களோ ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு கொடுக்க பாகிஸ்தான் வாங்கியகடனுக்கு ஆப்கானை சீனாவிடம் அளித்து இருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானில் 60% பேர் ஹசாரா, உஸ்பெக், தஜிக்–ஷியா,மக்கள். சன்னி தாலிபான்கள் பெரும்பாலும் பஷ்டூன் இனம். பஷ்டூன்களை பொறுத்தவரை, ஆஃப்கானிஸ்தான் அவர்களுக்கு மட்டுமே சொந்தம். மற்ற ஷியா ஹசாரா, உஸ்பெக், தஜிக் இனங்கள் தாலிபான்களை பொறுத்தவரை காஃபீர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். அதன் படி கொன்று குவிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக.,15ம் தேதி கைப்பற்றினர். ‛’ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்.,பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவர்,” என, தலிபான்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால், ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் கடந்த 8ம் தேதி மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் கடந்த 15ம் தேதி கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது. எங்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவர். குறிப்பாக, ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்,” என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.