மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ராஜினாமா கூட்டணிக்குள் சலசப்பு ! சிவசேனாவின் கூடாரம் காலியாகிறது !

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள் இதனை தொடர்ந்து “இது சிவசேனா ஆட்சி, காங்கிரஸ் ஆட்சியல்ல” என்று காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு சிவசேனாவை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதற்கு சிவசேனா காங்கிரஸ் ஒரு பழைய காட்டில் என பதிலடி கொடுத்தது. இதை வேடிக்கை மட்டும் பார்த்து வந்த தேசியவாத காங்கிரஸ் அமைதியாக அனைத்து தொகுதிகளில் அவர்களின் சாம்ராஜ்யத்தினை நடத்த தொடங்கியுள்ளார்கள். இது கூட்டணி அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த பிரச்சனை ஒரு சிவசேனா எம்.பியை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. பர்பஹானி லோக்சபா தொகுதி சிவசேனா கட்சி எம்.பி.யாக இருந்தவர் சஞ்சய் ஜாதவ், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது குறித்து விசாரித்ததில், தனது தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங், பிரமுகர்கள், சஞ்சய் சிங்கிற்கு எதிராக உள்ளூர் அரசியல் செய்வதால், கடந்த சில நாட்களாக மன உளச்சலில் இருந்துள்ளார்.

இதையடுத்து நேற்று சிவசேனா கட்சி தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.
அதில் கடந்த 2009-14 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014-2019 வரை லோக்சபா எம்.பி.யாகவும் பதவியில் உள்ளேன். பால்தாக்கரே காலத்திலிருந்து அரசியலில் உள்ளேன்.இங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகளால், என்னால் மக்கள் சேவை செய்ய முடியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் எனக்கு எதற்கு எம்.பி பதவி. எனவே எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அந்த கடித்தில் கூறியுள்ளார்.

தற்போது மீண்டும் மகாராஷ்டிரா கூட்டணியில் பிரச்சனை எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணியை சமாதானம் படுத்தவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது இவர்களுக்கு எப்படி மக்கள் மனநிலை புரியும் என சிவசேனா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு மேலும் சிவசேனாவில் நீடித்தால் எதிர்காலம் என்ன ஆகும் என்பது தெரியவில்லை என்ற மனநிலையில் சிவசேனா கட்சியினர் நொந்து போயுள்ளார்கள். மேலும் மண்ணின் மைந்தர் கொள்கையை சிவசேனா காற்றில் பறக்கவிட்டுள்ளது,இது பல சீனியர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version