Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி : பெண் ஐடி ஊழியர் வீட்டில் கஞ்சா பறிமுதல்…

Oredesam by Oredesam
April 25, 2024
in செய்திகள், தமிழகம்
0
Kanja

Kanja

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் எதோ மது சிகெரட் விற்பதுபோல் ஆகிவிட்டது.நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. மேலும் கஞ்சா போதையில் பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இளம் தலைமுறையினரை அதிகம் பாதித்துள்ள கஞ்சா பழக்கம் அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. ஒரு கிராம நிர்வாக அலுவலரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தான் போதை பொருள் கடத்தல் தலைவனாக செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.கடந்த அதிமுக ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா விற்கிறார்கள் என குட்காவை தொக்கி கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த திமுக ஆட்சியில் குட்கா கிடைகிறோதோ இல்லையோ கஞ்சா எளிதில் கிடைக்கிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சென்னையில் தங்கி பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி அறைககளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சூளைமேடு போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பை கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகியிடம் உரிய அனுமதி பெற்ற போலீசார், பெண் போலீசாருடன் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு அறையில் இருந்து வித்தியாசமான வாசனை வந்துள்ளது.

இதையடுத்து அறையினுள் சென்ற போலீசார், சோதனை செய்தபோது, அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு ஒரு பண்டல் இருந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது, முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த அறையில் இருந்த இளம் பெண்ணிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சூளைமேடு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மிளா (25) என்பதும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. சர்மிளாவின் தாய் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது, திருத்தணியைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ் என்பவர் சர்மிளாவுக்கு பழக்கமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் சர்மிளா வசித்து வந்த போது, சுரேஷ் பெங்களூரு சென்று வந்ததும், தற்போது சர்மிளா சென்னை வந்ததும் அடிக்கடி சர்மிளாவை காண சுரேஷ் சூளைமேட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. தனது நண்பரான சுரேஷ், சில தினங்களுக்கு முன் ஒரு பார்சலை கொடுத்து பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றதாகவும் ஆனால், அது கஞ்சா என தனக்கு தெரியாது எனவும் போலீசாரிடம் சர்மிளா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சர்மிளாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் முதல் தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், திருத்தணியில் தலைமறைவாக இருந்த சுரேஷை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷிடம், அசாமில் இருந்து உயர்தர முதல் கஞ்சா எப்படி கிடைத்தது? எத்தனை ஆண்டு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

BREAKING: 189 people on downed Lion Air flight, ministry says

February 1, 2020
Murder

தமிழகத்தை உலுக்கிய ஒரே நாளில் 6 படுகொலைகள்… பேரதிர்ச்சியில் தமிழக மக்கள்..

September 9, 2024
modi national flag

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இன்று நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வுகள் !

June 9, 2024
தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர்  4 பேருக்கு கொரோனா உறுதி!    எண்ணிக்கை  26 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர் 4 பேருக்கு கொரோனா உறுதி! எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

March 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x