திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார். கடந்த இரண்டு நாட்ககளுக்கு முன்னதாக காணாமல் போனார். ஜெயக்குமார் கடந்த மே 2 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
இந்த நிலையில்காணாமல் போனதாக காவல்துறையால் தேடப்பட்டு வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டாரா கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் KPK ஜெயகுமார். கடந்த 02.05.24 ம் தேதி மாலை வீட்டில இருந்து வெளியே சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கூறி உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரின் புகார் அளித்துள்ளார். மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் KPK ஜெயக்குமார், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தனக்கு நேரிலும் போனிலும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உட்பட சில நபர்களின் பெயர் விவரங்களை எழுதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் தனது வீட்டின் முன்பாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், தேர்தலின் போது கேட்ட செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கட்டுமான பணியை மேற்கொண்டு பின் அதற்கான பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சில நபர்களின் பெயர்களை புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிலத்தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, மற்றும் கட்சி கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்து வந்ததாக தெரிகிறது. கொலை மிரட்டல் வருவதாகவும் காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.இந்த நிலையில் முக்கிய திருப்பமாக தற்போது ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.