நேற்று முதல் தமிழகத்தின் ஹாட் டாபிக் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் மின்வாரியத்தில் நடைபெற உள்ள ஊழல் பற்றி வெளிப்படையாக பேசியது தான். அது என்னவென்றால் முக்கியமான எனர்ஜி கம்பெனியிடம் மின்வாரியம் மின்சாரம் வாங்க போகிறது
இதற்கான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொண்டுள்ளது. அந்த எனர்ஜி கம்பெனி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. அந்த கம்பெனியை திமுகவை சேர்ந்த ஒருவர் வாங்க உள்ளார். அந்த கம்பெனியிடம் மின்வாரியம் 4000 கோடி முதல் 5000 கோடி வரை ஒப்பந்தம் போடுவதற்கு பேரம் பேசி வருகிறார்கள். அதுவும் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் என்ற அளவில் வாங்க போகிறார்கள். வழக்கமான விலையை விட நான்கு மடங்கு அதிகம். இதை அரசு அதிகாரிகள் நிறுத்தி கொள்ளவேண்டும், ஆரம்ப நிலையில் இருப்பதால் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பெயரை குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
மேலும் இதையும் மீறி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் பேரம் பேசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார் .இந்த நிலையில் பாஜக மாநில பொருளாளர் SR.சேகர் அவர்கள் ஒரு ட்வீட் போட்டுள்ளார். இது தமிழகத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவர் போட்டுள்ள ட்வீட்:
பஞ்சாப்பில் பிறந்த தமிழக IAS அதிகாரி ஏன் மத்திய பெண் மந்திரியைப் பார்த்து மின்சார அணில் மந்திரியின் சில ரகசிய File களை போட்டோ எடுத்து தருகிறார்? விடியலுக்கு இனி தீராத தலைவலிதான். 2024க்கு போட்ட 10000 கோடி. Target கானல்நீர் தானோ?
யார் அந்த பாஞ்சாப் IAS அதிகாரி யார் அந்த அணில் அமைச்சர் அணில் அமைச்சர் என்பது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவுக்கே தெரியும். அந்த பெண் மத்திய அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் அனைவரருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
தமிழகத்தில் பல அதிரடிகளைநிகழ்த்த அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்துள்ளது தமிழக பாஜக என சொல்வது போல் பாஜக மாநில பொருளாளர் SR.சேகர்ட்வீட் அமைந்துள்ளது.அதில் மிக முக்கிய சம்பவம் 2024 க்குள் 10000 கோடி என குறிப்பிட்டுள்ளார்.அது கானல்நீர் தானோ என தெரிவித்திருக்கிறார், இவர் கூறுவது 2024க்குள் 10000 கோடி ஊழல் செய்யலாம் என இருந்தது தற்போது கானல் நீராகி விட்டது. என சொல்கிறார்.
அடுத்தடுத்து தமிழகத்தில் பாஜகவின் அதிரடி சம்பவங்களால் மிக பெரிய ஊழல் சம்பவம் வெளிவரப்போகிறதோ? என்ற கேள்வி தமிழகத்தில் மேலோங்கியுள்ளது.