ராமர் கோவில் அபிஷேகம் நடத்தக்கூடாது?இந்து அறநிலைய துறை அதிகாரியின் ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை..

ANNAMALAI

ANNAMALAI

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக லைவ் நிகழ்ச்சிகளை திறந்த வெளி மைதானத்தில் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்துள்ளதாக பா.ஜ., பிரமுகர்கள் கூறியுள்ளனர். இது போன்ற தடைகளை போடும் மாநில அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தார்கள்

இதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு தெரிவித்ததோடு மத்திய அமைச்சர் பொய் சொல்கிறார் என்றார். அதற்கு கண்டனம் தெரிவித்தார் அண்ணாமலை மேலும் அயோத்தி ராமர்அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக லைவ் நிகழ்ச்சிகளை திறந்த வெளி மைதானத்தில் ஒளிபரப்ப காவல் துறை தடை க்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில் ஆடியோவை ரீலிஸ் செய்தார் அந்த ஆடியோவில் இந்து அறநிலைய நிர்வாக அதிகாரிக்கும் மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் பக்தருக்கு இடையேயான உரையாடல்.

இந்து அறநிலைய நிர்வாகி பேசும்போது ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வாய்வழி அறிவுறுத்தல்களைப் பெற்றதாக வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். இதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிப்பாரா? அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

Exit mobile version