சைலண்ட்டா சின்னவர் செய்த செயல்… சிதிலமடைந்த பா.ரஞ்சித்.படம் வெளியீட்டிலும் சமூக நீதியா? இது புது உருட்டா இருக்கே…

pa.ranjith Uday,

pa.ranjith Uday,

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் கடைசியாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வசூலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதற்கு காரணம் சின்னவர் தான் என பா.ரஞ்சித் ஆதரவாளர்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாமன்னன்’ .
மாமன்னன்’ திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், அதில் உள்ள பட்டியலினத்தவர்களுக்கு உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக மாமன்னன் திரைப்படம் சொல்லி இருப்பதாக பா.ரஞ்சித் கூறினார்

அப்போதிலிருந்தே உதயநிதிக்கு பா.ரஞ்சித்துக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தை உலுக்கியது இதில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் ரஞ்சித் இதனால் திமுகவுக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே உள்ள நட்புறவு உடைந்தது மேலும் திமுக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கினார்பா.ரஞ்சித் இது திமுகவினரை மேலும் கடுப்படைய செய்தது.

இந்த நிலையில் தங்காளான் படம் வெளியே வருமா என்ற கேள்வி மேலோங்கியது. ஆனால் கருணாநிதி குடும்பத்தின் உறவினரான விக்ரம் நடித்துள்ளதால் விக்ரம் தான் குடும்பத்தினரிடம் பேசிய பிறகு தான் படம் வெளியே வந்தது ஆனால் இப்படம் சரியாக போகவில்லை இதற்கு காரணம் பா.ரஞ்சித்தின் திரைக்கதை அம்சம்தான் இந்த நிலையில் தான் இப்போது பா ரஞ்சித் ஆதரவாளர்கள் படம் வெற்றியடையாததற்கு பாடம் வெளியீட்டில் காட்டப்பட்ட சமூக நீதிப் பிரச்சினையை என்கிறார்கள் இது சினிமா வட்டாரத்தில் புது உருட்டாக பார்க்கப்படுகிறது

அதிக பட்ஜெட் என்று தெரிந்தும் தியேட்டரின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தங்கலான் திரைப்படத்தோடு டிமான்டி காலனியை சேர்த்து வெளியிட்டதும் ஒரு அரசியல்.நல்லா
போய்க் கொண்டிருந்த தங்கலான் திரைப்படத்திற்கு தடங்கள் ஏற்படுத்துவதற்காக அடுத்து 6 நாட்களிலேயே வாழை திரைப்படத்தையும், அதனுடன் கொட்டுக்காளி திரைப்படத்தை இறக்கி விட்டதும் ஒரு அரசியல்.
இன்று வேறெந்த திரைப்படத்தையும் இறக்காமல் அனைத்து திரையரங்கிலும் விஜய் படத்தை மட்டுமே திரையிடுவது என்பது பொருளாதாரச் சார்ந்த அரசியல்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் கடைசியாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருந்தார்.

விஜய் திரைப்படம் ரிலீஸ் ஆனதற்கு பின்பாக அடுத்த ஐந்து நாட்களில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகவிருந்ததையும், தற்போது கங்குவா திரைப்படத்தை தள்ளி போட்டதும் ஒரு வகையான அரசியல்.
விஜய்க்கு போட்டியாக எந்த திரைப்படத்தை இறக்கி விடாமல் விஜய் திரைப்படத்திற்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் மாஸ் ஹீரோ, அதிக வசூல் என்று பிம்பப்படுத்துவது இமேஜ் கிரியேட்டிங் என்ற கேவலமான அரசியல். உங்கள் அரசியலுக்குள் மத்தியில் தான் சமூக நீதி அரசியலையும் பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.. என குமுற ஆரம்பித்து விட்டார்கள்

Exit mobile version