வேதபாடசாலைக்காக சொந்த இடத்தை தானம் தந்த பாடகர் SPB எஸ்.பி.பாலசுப்ரமணியன்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்,புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி என்று மக்களால் அழைக்கப்படுபவர். 1966 இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் சிறந்த பக்தியாளர். இவர் பிறந்தது நெல்லூர் ஆகும். இவரின் மூதாதையர் இல்லத்தை காஞ்சி மடத்தின் வேத பாடசாலை அமைக்க, முறைப்படி ஒப்படைத்தார்.

நெல்லூருக்கு சென்றிருந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். நெல்லூரில் திப்பராஜுவாரி தெருவில் பரம்பரை வீடு அங்குள்ளது. பரம்பரை பரம்பரையாக குடும்பம் வாழ்ந்த இந்த இடத்தில வேதபாடசாலை அமைக்க வேண்டும் என எண்ணினார். இதனை தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அந்த சமயத்தில் நெல்லூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சென்றிருந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் நெல்லூருக்கு அவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர். தமது நெல்லூர் இல்லத்தை காஞ்சி மடத்தின் சார்பில் நிறுவப் படவுள்ள சம்ஸ்க்ருத வேதபாடசாலைக்காக அளிப்பதாகக் கூறி, முறைப்படி ஒப்படைத்தார்.

Exit mobile version