இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீவிரவாத குழுக்களை களமிறக்கி வருகிறது பாகிஸ்தான். இந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல்கள், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைக் குடித்து வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா எழுப்பியுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளை அனுப்பி 26 பேரை படுகொலை செய்த பாகிஸ்தான் இப்போது இந்தியாவிடம் இருந்து வரப்போகும் அதிரடியான தாக்குதல்களை நினைத்து கதிகலங்கிப் போயுள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
இதனால் மேலும் கலங்கி போயுள்ளது பாகிஸ்தான். இதற்கிடையில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில். பாகிஸ்தானில் பிராந்தியத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என கதற ஆரம்பித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 3-வது சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய அதிரடித் தாக்குதலானது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் காஷ்மீரில் உள்ள 42 தீவிரவாத முகாம்களை குறிவைத்துதான் இருக்கும் என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்.
தற்போது ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை பச்சை படுகொலை செய்திருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல். ஈவிரக்கமே இல்லாமல் மகன், மகள், மனைவி கண்முன்னேயே இந்த படுபாதக கொலையை நிறைவேற்றி இருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல். இதனால் நமது நாடு பெரும் கோபத்தில் இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் உச்சமாக, பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்க்க முடியாத- கற்பனைக்கு எட்டாத பலமான அடி வாங்கப் போகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் மீது 3-வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த நமது நாடு தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி, 3-வது சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின் முதல் பகுதியாக இருக்குமாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் 42 இடங்களில் மிக முக்கியமான தீவிரவாத முகாம்கள் இருக்கின்றனவாம். இந்த 42 தீவிரவாத முகாம்களையும் ஒருசேர அழிப்பதுதான் இந்தியாவின் வியூகமாம்
இதற்கிடையே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸிடம், இந்தியாவை சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குங்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார் ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நமது ராணுவம் பதிலடி தருகிறது
இதனிடையே ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் கோபம், தாக்குதல் அச்சம் குறித்து அழுது புலம்பி உள்ளார். மேலும் இந்தியாவை சற்று பொறுமை காக்க வேண்டும் என ஐநா சபைதான் அறிவுறுத்த வேண்டும் என கெஞ்சியிருக்கிறார் ஷெபாஸ் ஷெரீப். அத்துடன், பாகிஸ்தானும் அனைத்து வகையிலான பயங்கரவாத தாக்குதல்களையும் நிராகரிப்பதாகவும் உறுதியளித்தாராம் ஷெபாஸ் ஷெரீப். மேலும் இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் தங்களை தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அன்டோனியா குட்டரெஸிடம், ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என்கின்றன பாகிஸ்தான் நாளேடுகள்.