ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியின் போது சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை பருகி இருக்கிறார்சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.
பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கு இடங்களில், smoking biscuit-ஐ வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும், அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில, இந்த smoking biscuit தயார் செய்யும் இடங்கள், ஆய்வு செய்து, இதன் பாதிப்பை எடுத்துக் கூறி, சுற்றறிக்கை கொடுக்கவும், முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு அளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் திரவ நைட்ரஜன் உணவு பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளனர். liquid nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
. அதனை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வயிற்றுவலியால் துடித்த சிறுவனை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திரவ நைட்ரஜனை புகை வடிவில் உட்கொள்வது எந்த வயதினருக்கும் ஆபத்து தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆய்வு கூடங்களில் பொருட்களை குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அரை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது. இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்மோக்கிங் பிஸ்கட், ஸ்மோக்கிங் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர். liquid nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.