சமுக வலைதளங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இது எதை உணர்த்துகிறது என்றால் வரும்காலங்களில் சமுக வலைதளங்கள் மீது கடுமையான கட்டுபாடுகள் விதிக்கலாம் இல்லை சீனாவைப் போன்று தடையை விதிக்கலாம். ஆனால் இது இந்தியாவில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. ஆனால் நடப்பது மோடி அமித்ஷா கூட்டணி அல்லவா என்ன 70 வருடங்கள் தீர்க்கப்படாத பிரச்சனைகளை கடந்த 6 மாதத்தில் முடித்து காட்டியுள்ளனர்.
இதனால் இதுவம் சாத்தியமாகும் என்கின்றார்கள். இந்த சமுக வலைதளங்களால் நன்மை உண்டு என்றாலும் சில தீவிரவாத அமைப்புகள் இந்த வளைதளங்களில் குழுக்கள் அமைத்துக் கொண்டு வதந்தியை பரப்புகிறார் இதனால் கலவரங்களும் வேகமாக பரவுகின்றன. இதனால் இதற்கு கடுமையான கட்டுபாடுகள் தேவை. அதை அமல்படுத்துவதற்கு தான் ஒரு முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது போன்ற ஒரு செய்தியை பதிவிட்டுளார்.
அதிக அளவில் பொய்கள் பரப்படுவதால் இந்த முடிவு என பிரதமர் மோடி குறிப்பிட்டால் போதும் அதற்கடுத்து நடவடிக்கை பயங்கரமாகக் இருக்கும். என்பதில் ஐயமில்லை. திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சில்லறைகள் மேடையில் வைத்து பிரதமர் என்றும் பாராமல் ஒருமையில் பேசுகின்றார்கள், அதற்கு கூட வழக்கு தொடரவில்லை தமிழக பாஜக. பிரதமரும் அதை விரும்பமாட்டார். சமூக வலைத்தளங்களை பற்றி அவர் கவலைப்படுவது பொய்கள் பரப்புகிறார்கள். அதனால் மக்கள் நிம்மதியை இழக்கிறார்கள், இதற்கு தீர்வு காணும் விதமாக முதலில் நான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன் என்று சமிக்கை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
விரைவில் சமூகவலைத்தளங்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் வருவது உறுதி,சமூக வலைதள போராளிகள் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















