சிலர் களத்தில் இறங்குவதில்லை ட்விட்டரில் மட்டுமே இயங்குகிறார்கள்! பாஜக தலைவர் தாக்கு!

நாடு முழுவதும் பாஜக மாநில செயற்குழு கூட்டங்களை காணொளி வாயிலாக நடத்தி வருகிறது. சென்ற வாரம் தமிழக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் பீகார் மாநில பா.ஜ.க., செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் தலைமைவகித்தார். மேலும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற பீகார் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: சேவை என்பது நமது கட்சிக்கு இணையானது’ என்ற தாரக மந்திரத்தைபாஜகவினர் வாழ்க்கை நடைமுறையாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரண்டாவது அலையின் போது தேவைப்படுபவர்களுக்கு பயமின்றி உதவினார்கள். மற்ற கட்சியினர் டுவிட்டரில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். பாதுகாப்பான இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். நெருக்கடி தருணங்களில் போது ஜெயபிரகாஷ் நாராயண் வீட்டிற்கு வெறுமனே வந்தால் கூட கைது செய்வார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நம் தலைமுறை செய்த தியாகங்களைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version