தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

சில மத்திய அரபிக் கடல் பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதிகள், வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதி ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் விரைவாகத் தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.


மேற்கு சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் மேற்கத்திய இமாலயப் பகுதிகளில் பரவலானது முதல் மிகப் பரவலானது வரையிலான மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே காலத்தில் வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


அடுத்த 4-5 தினங்களில் மேற்கு கடலோரப் பகுதிகளில் மிகப் பரவலான மழை /இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே காலத்தில் குஜராத், மகாராஷ்டிராவின் உட்பகுதிகள், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகத்தின் உட்பகுதிகள், தமிழ்நாடு ஆகியவற்றில் ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கும். அடுத்த 3 நாட்களுக்கு கேரளா, கொங்கன், கோவா
ஆகியவற்றில் ஒருசில இடங்களில் கன மழையும், அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கன மழையும் இருக்கும்.

 

Exit mobile version