கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு, கடந்த மே 2ம் தேதி முதல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகியக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து காலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11:40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 2:35 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில்,தற்பொழுது போதிய பயணிகள் அளவில் இந்த ரயிலில் பயணிக்கவில்லை என்கிற காரணத்தால்,ராமேஸ்வரம் சிறப்பு ரயில், வரும் 13 ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
