மின்வெட்டு ஆங்காங்கே வரத்தொடங்கி உள்ளது.இப்போது தமிழகத்தில் பல இடங்களில் இது தொடர்கிறது. கோடைக்காலத்தில் வீட்டு உபயோகத்திற்கு மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. இதுவும்நிர்வாகம குளறுபடிதான். திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் நிலைகளிலும் தொடர்கிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மின்தடைக்கு காரணம் அணில் என்று கூறியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மின்சாரம் விநியோகம் சீராக இல்லை. பகல் பொழுதுகளில் பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு நீர் இருந்தும் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பல மாவட்டங்களில் மின் தடை என்பது தொடர்கிறது.
இந்த நிச்சயமற்ற மின்வெட்டால் ஐடி கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரியும் மென்பொருள் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சில நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலும் அவர்களுடைய பணி மிகவும் பாதிப்படையச் செய்கிறது. இதனால் அவர்களுக்கு இன்வெட்டர் அவசியம் தேவைப்படுகிறது.
எப்போதும் ஜீன் மாதம் மின்வெட்டு கடுமையாக இருக்கும். அதுவும் இல்லாமல் மிக சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு. ஜீலை மாதங்களில் இருந்து காற்றாலை மின்சாரம் வெகுவாக கைக் கொடுக்கும். ஏன் அப்பொழது மின்சாரம் தமிழ்நாட்டில் உபரியாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் காற்றாலை மின்சாரம் உபரியாக இருக்கும் பொழது யாரும் வாங்குவதில்லை.
அப்பொழது காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் எங்கள் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கதறுவார்கள். ஆனால் பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆனாலும் மத்திய அரசு வாங்கிக் கொள்கிறது. இந்த மின்சாரத்தை இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பசுமை வழிதடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் 7000 மெகவாட் மின்சாரம் தினந்தோறும் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை காற்றாலை மின் அமைப்புகள்.
வடமாநிலங்களில் ஏராளமான மின்சாரம் உற்பத்தி ஆகிறது. அதே சமயம் தென்மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு நிலவியது. மோடி அவர்கள் பிரதமரான பிறகு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை வழித் தடங்கள் ஏற்படுத்தப்பட்டு சட்டிஸ்கர், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டது.இதனால் மின்சாரப் பற்றாக்குறை தென்மாநிலங்களில் வெகுவாக குறைந்தது.
மேலும் சூரியஒளி மின்சாரத்திற்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டது . விவசாயிகள் மின் இணைப்புக்கு 20 வருடங்கள் காத்திருந்து மின் இணைப்பு பெற்றனர். ஆனால் சூரிய ஒளி மின் இணைப்பு ஒரே வருடத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தது. அதுவும் 90% மானியத்தில் சூரிய ஒளி மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான எல்லாச் சலுகைகளையும் மத்திய அரசிடம் வாங்கிக் கொடுத்தார்கள் குறிப்பாக மின்சாரத்தை அதிக அளவில் பெற்றுத்தான் தந்தார்கள். ‘
மின்கம்பிகளில் உரசுவதாலும், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டா்கள் மற்றும் டிஸ்குகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளில் அணில், காகம், மயில், ஆந்தை உள்ளிட்ட பறவைகள் மோதுவதாலும் எதிா்பாராமல் மின்தடை ஏற்பட்டு வந்தது. என அமைச்சர் பேசினார்.
திமுக அரசின் நிர்வாக குழப்பதினால் தான் தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படுகிறது. கோரோனோ காலகட்டத்தில் பராமரிப்பு செய்யப்படவில்லை என காரணம் கூறுகிறார் அமைச்சர் ஆனால் அதிமுக ஆட்சியில் எப்படி கொடுக்கப்பட்டது மின்சாரம். என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். பொதுமக்கள். அவர் பேசிய வீடியோ லிங்க்