இந்த நபர் ஏற்கனவே ” இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் ” என வனமுறையைத் தூண்டும் விதமாக பேசிய பேச்சுக்கு , நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த முறையாவது தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.அஸ்வத்தாமன்
பாஜக
#
வழக்கம்போல் புகார் வடிவம் அளிக்கிறேன். காவி சொந்தங்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன், வழக்கறிஞர்,
மாநில செயலாளர் – சட்டப் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,
பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம் ஊட்டி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் முயற்சித்தல், ஆகிய குற்றங்களுக்காக எஸ்ரா சற்குணம் என்பவர் மீது புகார் அளித்தல் சார்பு.
மேற்கண்ட எஸ்ரா சற்குணம் என்ற நபர் , ஏற்கனவே “இந்துக்கள் முகத்தில் இரத்தம் வரும் வரை குத்துங்கள்” , என்று வன்முறையைத்தூண்டும் விதமாக பேசியுள்ளார். அது சம்பந்தமாக நான் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த நபர் , திமுக கூட்டணி சார்பாக நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் 18.12.2020 அன்று பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
( வீடியோ link https://twitter.com/Kailash_Shiv3/status/1340543561771585538?s=19 )
அதில், கட்டின மனைவியை உடனேயே 5 நாட்கள் கூட வாழ முடியாதவர் இந்த தேசத்தை எப்படி ஆள முடியும் என்றும் மோடி இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என்று நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம் என்றும் மேலும் அச்சில் ஏற்ற முடியாத கொச்சையான அவதூறுகளை பாரத பிரதமர் எதிராக பரப்பும் வகையிலும் பேசியுள்ளார் .
நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மீதும் கொச்சையான அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடும் , மக்களிடையே இந்த தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், அவ்வாறு அவதூறுகளை பரப்பி தேசப்பற்றாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் தூண்டி சின மூட்டி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மேற்கூறப்பட்ட நபர் பேசியுள்ளார். மேலும் தேசப்பற்றாளர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட எஸ்ரா சற்குணம் என்ற நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 294, 295 ,499, 504, 505 (2) ,188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தேசப்பணியில் ,
அ.அஸ்வத்தாமன்
பாரதிய ஜனதா கட்சி,