நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது. பிரசாந்த் கிசோர் உதவியால் இது முடிந்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக பெரிய பிம்பம் உருவாக்கப்பட்டது ஊடகங்களால். உலக தலைவர் அளவிற்கு பேசப்பட்டார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டனர் முன்களப்பணியாளர்கள்.
அது இன்று நிரூபித்துவிட்ட்டார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆம் சர்வேதேச மருத்துவர் ஒருத்தர் தமழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய வீடியோ தான் இன்றைய ட்ரெண்ட் ஆகும். தற்போது தான் உலக அளவில் பெயர் பெற்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல ஊடகம் ஸ்கை நியூஸ் இதில் கொரோன தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் ஆஸ்திரேலிய எம்.பி கிரெய்க் கெல்லி பங்கேற்று பேசினார். இந்த விவாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து பேசப்பட்டது.
ஆஸ்திரேலிய எம்.பி, இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது இதற்கு காரணம் பல மாநிலங்கள் ஐவர்மெக்டின் என்ற மருந்தை பயன்படுத்தி வருகிறார்கள் அதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது என பேசினார். மேலும் அவர் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் மட்டும் ஐவர்மெக்டின் மருந்தினை தடை செய்துள்ளது என தமிழகத்தினை குறிப்பிட்டு சொன்னார்.
வெளிநாட்டை சேர்ந்த மருத்துவர் பியர் கோரி பிரெட் வெயின்ஸ்டைன் என்ற ஆய்வாளரும் கொரோனா பெருந்தொற்று பற்றி மேற்கொண்டவிவாதத்தில் , “இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக சென்ற நிலையில் ஐவர்மெக்டினை மருந்தினை இந்தியாவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்திய மருத்துவர்களின் தலைமை அமைப்பான ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஐவர்மெக்டினை பயன்படுத்த தொடங்கினார்கள் . மேலும் இந்தியாவில் உள்ள கோவா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 5 நாட்களுக்கு ஐவர்மெக்டினை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் அறிவித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
“அந்த செய்தியினை நான் அறிந்த போது நான் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்திருந்தால் கோவா அமைச்சர் செய்ததை தான் நானும் செய்திருப்பேன் என கூறினார், மேலும் அவர் பேசுகையில் இந்தியாவில் கோவா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஐவர்மெக்டினை மருந்தை உபயோகப்படுத்தின. அதன் பின்அந்தந்த மாநிலங்களில் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய தொடங்கியது. இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் இதுக்கு எதிர்மறையாக செயல்பட்டது. அந்த மாநிலம் தமிழ்நாடு அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் ஐவர்மெக்டினை பயன்படுத்தக் கூடாது என்றும்ரெம்டெசிவிரை பயன்படுத்தவும் உத்தரவிட்டார். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை உச்சத்திற்கு சென்றுள்ளது.
“ஏன் தடை விதித்தார் அந்த முதல்வர் என்று தெரியவில்லை அந்த மாநிலத்தின் முதல்வர் பெயர் மு.க ஸ்டாலின். அழுத்தி கூறினார் . இந்தியாவில் உள்ள இந்த முதல்வர் ஸ்டாலின் ஐவர்மெக்டினை தடை செய்துள்ளார். எதற்காக என்று தெரியவில்லை இதன் காரணமாகி தமிழகத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது” என்று அந்த மருத்துவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உடன் பிறப்புகள் “எனது தொகுதி அளவுக்குத்தான் இருக்கும்” கோவாவை தாழ்த்தி பேசினார்கள் ஆனால் அந்த கோவாஉலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினோ “போயும் போயும் இவனுக்கா” ஓட்டுப் போட்டார்கள் என்று வெளிநாட்டவர்கள் கூட தமிழக மக்களை எண்ணி வேதனைப்படும் அளவு பெயர் பெற்றிருக்கிறார்.