முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்தார்.
இதை தொடர்ந்து நம் திமுக தலைவியார் கண்டனம் தெரிவிப்பதற்கு ரெடியானர். அதற்கு மேடையும் கிடைத்தது என்ன பொது மேடை அல்ல சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழா மேடை,அங்கு சென்று மணமக்களை வாழ்த்தாமல் அவர் முதல்வர் அகா முடியாத ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொண்டார். இதில் ஒரு சின்ன மாற்றம் இந்துக்கள் கல்யாணத்தை பற்றி இந்த கல்யாண மேடையில் பேசவில்லையாம்.
இதனால் கன்டென்ட் கிடைக்கவில்லை என்று சோகத்தில் இருந்தனர்,மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.
நம் திமுக தலைவர் தான் கன்டென்ட் தலைவர் ஆயிற்றே அதெப்படி கொடுக்காமல் விடுவார் ‘டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்ற சராசரி அறிவு கூட முதல்வர் பழனிசாமிக்கு இல்லை’ கல்யாண மேடையில் பேசினார், அவ்வாறு ஸ்டாலின் பேசும்போது, வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என மாற்றி சொல்லியிருந்தார். அதனை கிண்டல் செய்துள்ள அதிமுக, அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறார் திமுக தலைவர். ஒருவேளை வேளாண் மண்டலத்தை அழித்து பொருளாதார மண்டலம் ஆக்குவதற்காக மீத்தேன் எடுக்க தான் போட்ட கையெழுத்து மனதிற்குள் நினைவில் வந்து விட்டதோ என்னவோ?’ என கிண்டலாக பதிவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஹாப்பி அண்ணாச்சி ! என கூறி இந்த வீடியோவை பரப்பி வருகின்றன. பிரசாந்த் கிஷோர் எப்படி காலம் தள்ள போகிறாரோ