தமிழகத்தில் திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையம்! விவசாயிகள் தற்கொலை முயற்சி! ஐ.பி.எல் காண துபாய் பறந்த முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

oredesam

oredesam

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஐ.பி.எல் காண துபாய் பதுபாய் பறந்தது.!

கறம்பக்குடி வட்டம் கரு.கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் காவிரி நீர், ஆழ்துளை கிணற்று நீரைக் கொண்டு சுமார் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததைப் போன்று, நிகழாண்டும் இங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கருதி ஏராளமான நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர்.

ஆனால், அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கின

2 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, எந்த தீர்வும் ஏற்படாததையடுத்து கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே குரும்பிவயல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருமணஞ்சேரி விலக்கு வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதைக் கண்டித்து, அங்கும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்ய முயற்சி செய்ததைக் கண்டித்து, விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் தெரிகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதனை காண முதல்வர் குடும்பம் துபாய் பறந்தது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று , சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது இதில் சென்னை அணி வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு அலாதி ஆர்வம் உண்டு. ஏனென்றால் அதில் பணம் கொட்டுகிறது. கலாநிதிமாறன் ஒரு ஐ.பி.எல் டீம் வைத்துள்ளார். சன் ரைஸ் அணி என்று. கடந்த ஆண்டு மக்கள் எல்லாம் கொரோனாவால் நாடு ததத்தளித்த போது ஸ்டாலின் குடும்பத்தார் மக்களுக்கு உதவி செய்யாமல் ஐ.பி.எல் பார்க்க சென்றார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில், சென்னையில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால், குடும்பத்தினருடன் நேரில் கண்டுகளிக்கச் சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல் கலைஞர் டிவி நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் அவரது வாரிசும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கிரிக்கெட் சினிமா ரசிகர்கள்தான். ஸ்டாலினுக்கு நடிப்பு வரவில்லை அதனால் நடிப்பதை நிறுத்தி கொண்டார். உதயநிதி அவ்வாறு இல்லை இப்போதும் நடித்து கொண்டிருக்கிறார். நயன்தாரா முதல் ஹன்சிகா வரை முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடி விட்டார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற (அக்டோபர் 15-ம் தேதி) துபாயில் ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் காண முதல்வரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களுடன், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் தன் குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்.

Exit mobile version