வாடகை பாக்கி 3.46 லட்சம் செலுத்திவிட்டு அரசு பங்களாவை இந்த மாதத்திற்குள் காலி செய்ய பிரியங்கா காந்திக்கு நோட்டிஸ் !

பாதுகாப்பு பிரிவில் இசட், இசட் ப்ளஸ், எக்ஸ், ஒய், எஸ்.பி.ஜி ஆகிய பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது.எஸ்.பி.ஜி சிறப்பு பாதுகாப்பு படை என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டும் வழங்ப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை சென்ற ஆண்டு, இருந்தாலும்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கு கடந்த 1997-ம் ஆண்டு பாதுகாப்பு காரணத்திற்காக டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35ஆவது நம்பர் பங்களாவை அரசு ஒதுக்கியிருந்தது மேலும் எஸ்.பி.ஜி பாதுக்காப்பு வாங்கப்பட்டது

பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டது, மேலும் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரையின் படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது.தற்போது, அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, பங்களாவை காலி செய்யுமாறு, உத்தரவிட, அரசு வீடு ஒதுக்கீட்டிற்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்தது.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்குள் பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, 3.46 லட்சம் ரூபாய் செலுத்துமாறும், பிரியங்காவுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2000 ம் ஆண்டு, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு இல்லாத தனி நபர் யாருக்கும், பாதுகாப்பு கருதி, அரசு பங்களாவை ஒதுக்கக் கூடாது என,காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்தது. மேலும், 2003ல், சிறப்பு பாதுகாப்பு படை இல்லாமல் ஒதுக்கப்படும் பங்களாவுக்கு, சாதாரண வாடகையை விட, 20 மடங்கு அதிக தொகை வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்குள் பிரியங்கா காந்தியின் லோதி எஸ்டேட் பங்களாவை காலி செய்யுமாறு வீட்டுவசதி வாரிய மற்றும் நகர விவகார அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Exit mobile version