மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், MyGov-உடன் சேர்ந்து, நாடு முழுவதும், குறிப்பிட்ட வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு (IX to X அல்லது இடைநிலைக் கல்வி மற்றும் XI to XII அல்லது மேல்நிலைக்கல்வி) ஆன்லைன் கட்டுரைப் போட்டிளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு முகமையாக என்சிஇஆர்டி இருக்கும்.

‘தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா’ முக்கிய தலைப்பின் கீழ் ,கட்டுரைப் போட்டிக்கான உப தலைப்புகள் வருமாறு;

1.       தற்சார்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள்

2.       75-இல் இந்தியா ; தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு நடைபோடுகிறது

3.       ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சார்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் போது புதுமை செழிக்கிறது.

4.       டிஜிட்டல் இந்தியா; கோவிட்-19-இல், அதற்கும் அப்பால் வாய்ப்புகள்

5.       தற்சார்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு

6.       தற்சார்பு இந்தியா; பாலினம், சாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை

7.       தற்சார்பு இந்தியா; உயிரிப்பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல்.

8.       நான் என் உரிமைகளை அனுபவிக்கும் போது, தற்சார்பு இந்தியாவைச் செயல்படுத்தும்  எனது கடமையை மறக்கக்கூடாது.

9.       எனது உடல் தகுதி எனது செல்வமாகும். அது தற்சார்பு இந்தியாவுக்கு மனித மூலதனம்.

10.     தற்சார்பு இந்தியாவுக்காக, நீலப்பாதுகாப்பிலிருந்து பசுமைக்கு செல்லவும்.

இரண்டு மட்டங்களில் கட்டுரைகள் தேர்வு நடைபெறும். முதலாவதாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டத்தில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி தேர்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். என்சிஇஆர்டி நிபுணர்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளை தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும், தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அதாவது, என்சிஇஆர்டி-யால், இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தேர்வு செய்யப்படும்.  தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் பரிசுகள் அறிவிக்கப்படும்.

மாணவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் , தங்கள் பதிவுகளை 14 ஆகஸ்ட்  2020-க்குள் தாக்கல் செய்யலாம்.;https://innovate.mygov.in/essay-competition

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version