கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நேற்று (மே 1) வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே ‘கனிமா’ பாடல் தாறுமாறான வைரல், அல்போன்ஸ் புத்திரனின் ‘வித்தியாசமான’ எடிட்டிங்கில் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு, சூர்யாவின் கெட்-அப் என பல பாசிட்டிவ் அம்சங்களுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படம் வெளியான முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் சூர்யா ரசிகர்களையும் கூட திருப்திபடுத்தவில்லை என்பதை ஆடியன்ஸ் விமர்சனம் + சமூக வலைதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ’கங்குவா’ படத்தோடு ஒப்பிட்டு, அதற்கு இது பரவாயில்லை என்று சொல்லும் பல விமர்சனங்களை பார்க்க முடிகிறதே தவிர, ஒட்டுமொத்தமாக படத்தை பாராட்டுபவர்கள் குறைவாகவே தென்படுகின்றனர்.
ஒருகாலத்தில் விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளி தொடர் ஹிட் படங்களை கொடுத்து ‘நம்பர் 1’ நடிகராக இருந்த சூர்யா இன்று அடுத்தடுத்து கதைத் தேர்வில் சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மேலேயும் சூர்யா மேடைகளில் பேசி போராளிகள் போல் காட்டிக்கொள்ளும் வழக்கம் உடையதால் அவரின் பிம்பம் உடைய ஆரம்பித்தது. சினிமா நடிகர்கள், இனம், மொழி, ஜாதி பற்றியெல்லாம் பேசி, அரசுகளை விமர்சிப்பது வழக்கம். அதிலும், இவர்களிடம் சிக்குவது அதிமுக, பாஜ அரசுகள் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்கள் எதற்கும் கருத்து சொல்லாமல் காணாமல் போய்விடுவர்.இதில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பது நடிகர் சூர்யா மட்டுமே.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ‘கள்ள மவுனம்’ காத்து வந்து இருநாட்களுக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு என கூறாமல் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார் இந்த போராளி சூர்யா. சூர்யா, ‛‛ஆட்சி நிர்வாகத்தை” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளாரே தவிர, ‘ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி” அல்லது ‛‛திமுக அரசு” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆட்சி நிர்வாகம் என்றாலே முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் என்று நாமே புரிந்துகொள்ள வேண்டியது தான்.முதல்வரின் பெயரையோ கட்சியின் பெயரையோ குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
குறிப்பாக சூர்யா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது ஜெய்பீம் திரைப்படம். அந்த படம் நல்ல வேளை ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இல்லையென்றால் அவ்வளவுதான். ஜெய் பீம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வந்தது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று விமர்சனங்களை சந்தித்து வந்தது.
உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது. இது வன்னியர் மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது . பின்னர் அக்னி கலசம் இருந்த காலண்டருக்கு பதிலாக கடவுள் லட்சுமி வைத்தார்கள்.இந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளப்பியது.
அதற்கடுத்து அவரின் மனைவி ஜோதிகாஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசும் போது, கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் எனக்கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.
இந்த நேரத்தில் அவரின் சொத்து மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகை ஜோதிகா ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல், சென்னையில் 20,000 சதுர அடியில் மாபெரும் வீடு உள்ளது இதுமட்டுமில்லாமல், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அபார்ட்மெண்ட் வைத்து இருக்கிறார்.அது மட்டுமில்லாமல் BMW மற்றும் ஆடி கார்களை வைத்து இருக்கிறார். தற்போது, ஜோதிகாவின் சொத்து மதிப்பு 333 கோடியாக உள்ளது.
கணவரைவிட அதிக சொத்து: இதுமட்டுமில்லாமல்,சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் மூலம் வருமானம் வருகிறது.இவை மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார் ஜோதிகா. இதன்மூலமாகவே கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.அதுபோக, விளம்பரம் மற்றும் பெரிய ப்ராண்டுகளுக்கு ப்ராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார் ஜோதிகா இதன் மூலமாகவும் இவருக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் தனது கணவர் சூர்யாவை விட அதிக சொத்துக்களை வைத்து இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது
இதனை தொடர்ந்த 5 ஆண்டிகளாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தார் சூர்யா. இதற்கு ஜெய் பீம் படமும் காரணம் தான் அன்று எழுந்த நெருப்பு தற்போது வரை சூர்யா நடிப்பு வாழ்க்கையில் பற்றி எரிகிறது. இந்த நிலையில் தான் ‘ரெட்ரோ’வில் ஒருபடி மேலே போய் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வழக்கமான மேனரிசங்கள் எதுவும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பை வழங்கியிருந்தார். உதாரணமாக, சிறுவயது முதல் சிரிப்பே வராத ஒருவன் கண்ணாடியை பார்த்து சிரிக்க முயற்சி செய்யும் இடத்தில் சூர்யாவின் அசாத்திய நடிப்புத் திறமையை உணர முடியும்.
ஆனால், விழலுக்கு இறைத்த நீராக ஒரு சீரான திரைக்கதை படத்தில் இல்லாத காரணத்தால் அவை எதுவும் ஆடியன்ஸ் மத்தியில் எடுபட்டதாக தெரியவில்லை. ‘கங்குவா’ படம் வெளியான முதல் நாளிலேயே அதீத இரைச்சல், மோசமான திரைக்கதை, ஓவர்டோஸ் நடிப்பு என கடும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. படம் வெளியான ஓரிரு தினங்களில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் பற்றி வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மனம் நொந்து பதிவிடும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. இப்படியான சூழலில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் சூர்யா.
முதல் பாதி குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்த ‘ரெட்ரோ’ திரைக்கதை, அப்படியே இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விடுகிறது. இது சூர்யாவுக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிகிறது.
இது இப்படியென்றால் ‘ஜெய் பீம்’ படம் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் சூர்யா மீது அளவுக்கு அதிகமாக தூவப்படும் வன்மம் இன்னொருபுறம். படத்தை பார்க்காமலோ, அல்லது படம் வருவதற்கு முன்பாகவோ படம் குறித்த எதிர்மறை கமென்டுகள், மோசமான ஹேஷ்டேகுகள் போன்ற விஷயங்களை வேண்டுமென்றே பரப்புவதும் நடக்கிறது. படத்தையோ அதன் குறைகளையோ விமர்சிக்காமல் சூர்யாவை உருவகேலி செய்வதும், அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதும் மிகவும் அவமானகரமான செயல். இந்த போக்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. என சிவகுமார் குடும்பம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சூர்யாவுக்கு அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, லோகேஷ் கனகராஜின் ‘ரோலக்ஸ்’, ‘இரும்புக்கை மாயாவி’ உள்ளிட்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எனினும் மேலே சொல்லப்பட்ட உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்க சூர்யாவுக்கு தேவை ஒரு குறிப்பிடத்தக்க கம்பேக் மட்டுமே. அதற்கு ஏற்ப நல்ல கதையம்சம் கொண்ட படங்களை சூர்யா தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது ’அன்பான’ ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.