ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றினர். இருந்தபோதிலும், அங்குள்ள துணிச்சலான மக்கள் தலைவணங்கத் தயாராக இல்லை.
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் கூறுகையில், அங்குள்ள மக்கள் கிளர்ச்சி குழுவுடன் இணைந்து தாலிபனுக்கு எதிராக சண்டையை தொடங்கியுள்ளனர்.
தலிபான் எதிர்ப்பு தளபதி அப்துல் ஹமீத் தாட்கரின் தலைமையில், ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தின் மூன்று மாவட்டங்கள் தலிபான்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வர தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தாலிபன்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது.
அது போன்று தேஷ் சலாஹ் (Deh Salah) குவாசான் (Qasaan) ஆகிய மாவட்டங்களையும் தாலிபன்களிடம் இருந்து அங்குள்ள எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாவட்டங்களை தாலிபன்களிடம் இருந்து மீட்க நடந்த போரில் தாலிபன்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து தாலிபன்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.
பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகளுடன் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று தலைநகர் காபூலைக் கைப்பற்றியது, அதன் பிறகு, ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றார்.
அவருடன் ஏராளமான ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்துள்ளனர்.
ஆட்சி அமைக்க தீவிர முனைப்பில் உள்ள தலிபான்களுக்கு கிளர்ச்சியாளரர்கள் கிளம்பியுள்ளது மிக பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் டிடிபி தீவிரவாதிகளின் தலைவர் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்குவோம் என கூறியிருக்கிறார். டிடிபி தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்தால் ஆப்கானில் தாலிபான்களால் ஆட்சியில் நீடிக்க முடியாது.