ஹிந்தி மொழியின் உப மொழியான மராத்தியில் கடை திறக்கிறது சன் டிவி.! காசு காரிய‌த்தில் கண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோணே.

OREDESAM

OREDESAM

தமிழகத்தின் கல்லகுடியில் இந்தியில் ஒரு பெயர் எழுதியதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவர் கருணாநிதி, அந்த போராட்டத்தில் இறந்தவர் மட்டும் 3 பேர்

தமிழ் தமிழ் என கலவரம் செய்து, அந்த கலவரத்துக்கு “இந்தி எதிர்ப்பு போர்” என பெயரும் இட்டு சுமார் 100 பேரை கலவரத்தில் சாக வைத்து பல்லாயிரம் பேரை பாதிக்கவைத்து களபேரம் செய்த கட்சி திமுக‌ இப்பொழுது அக்கட்சியின் குடும்ப டிவி ஹிந்தி மொழியின் உப மொழியான மராத்தி மொழியில் கால்பதிக்கின்றது

ஆக அவர்கள் இந்தி படிக்கலாம், பேசலாம், தொழில் செய்யலாம், சொத்து குவிக்கலாம். அதையே மற்ற தமிழர்கள் செய்தால் விடமாட்டார்கள் “இந்தி திணிப்பு” என கிளம்பிவிடுவார்கள் சமீபத்தில் கூட “இந்தி தெரியாது போடா” என டிசர்ட் அணிந்துகொண்டு திமுகவினர் ரகளை செய்த காட்சியெல்லாம் உண்டு

இப்பொழுது இந்தியிலே தொலைகாட்சி நடத்தும் அளவு சென்றுவிட்டார்கள், விரைவில் சன்டிவி பாலிவுட் படங்களை தயாரிக்கலாம், அட்வான்ஸ் வாழ்த்துக்கள் எந்த இந்தியினை எதிர்த்து கருணாநிதி அடையாளமிட்டாரோ, அந்த குடும்பமே இந்தி மொழிகளில் டிவி நடத்தும் என்பதெல்லாம் அப்பட்டமான அரசியல் மோசடி,.

திராவிட தமிழ் பாச முகமூடி கிழியும் நேரம் தமிழனும் இந்தி படித்திருந்தால் அவனாலும் அகில இந்திய அளவில் பல வேலை வாய்ப்புகளை பெற்றிருக்க முடியும் அவன் வட்டம் விரிவடைந்திருக்கும், அதையெல்லாம் மொழிவெறி அரசியலால் சிதைத்து இன்று தாங்கள் மட்டும் மராத்தி இந்தி பேசுவோம் என்பதெல்லாம் என்னவென்றால் அதுதான் திராவிடம்.

புதிய கல்வி கொள்கை முறை அமலுக்கு வந்தது. இந்த கல்வி முறை இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் இதை திராவிட கட்சிகள் எதிர்த்து வருகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல துறைகளின் ஆகப்பெரும் ”பணக்கார” பிரபலங்கள் அரசியல்வாதிகள் திமுகவினர் ஒவ்வொருவரும்’ தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் தமிழகத்தில் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”’வேறுமாநிலத்தில் எனில்.அங்குள்ள எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?

வெளிநாடுகளில் படிக்கிறார்கள் எனில்.. ஏன் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் ?” போன்றவற்றை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்துவிட்டு .அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது .

ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி.என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.என்பது தான் .யாராலும் மறுக்க இயலாத இங்குள்ள கள எதார்த்தம்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பள்ளி கல்லூரிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் ஸ்கூல் இந்தி கற்று தருவதில்லையா ?

எல்லாம் நாடகம், எல்லாம் வேஷம், எல்லாமே தமிழகத்தை குழப்பி அடித்து மீன்பிடிக்கும் வேலை ஆக அதேதான், அந்த பராசக்தி பாடல்தான்”ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே..” என்பது இதுதான்

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இப்பொழுது மராத்தி என அவர்கள் கால் வைத்திருப்பது எதை சொல்கின்றது தமிழன்னை, இந்தி எதிர்ப்பு, தார் சட்டி, கலவரம், இந்தி திணிப்பு எல்லாம் வேஷம்.

Exit mobile version