இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக செயலாக்கி சிக்கலான கணக்கீடுகளை நொடிப்பொழுதில் முடிக்கும் திறன் கொண்டவை. இந்தியாவில் சூப்பர் கணினி தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சி-டாக். இது உருவாக்கிய Param தொடரின் சூப்பர் கணினிகள் இந்தியாவின் கணினி துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
பரம் ருத்ரா (Param Rudra) என்பது சி-டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் கணினிகளில் ஒன்றாகும். இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக செயலாக்கி, கணக்கீடுகளை நொடிப்ழுதில் முடிக்கும் திறன் கொண்டது. இது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பரம் ருத்ரா முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு சூப்பர் கணினி. இது இந்தியா, கணினி துறையில் சுயசார்பு அடைவதற்கான ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இது வானிலை கணிப்பு, பூகம்பா ஆய்வு, மருத்துவ ஆராய்ச்சி, வாகன வடிவமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் உயர்நிலை பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முக்கியமான தரவுகளை இதனால் பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவின் கணினி துறையின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். இந்த கணினியின் மூலமாக இந்தியா எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சிறப்பாக இருக்க முடியும்.
குறிப்பாக, இதன் மூலமாக அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கலாம். இது பல தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். குறிப்பாக, வானிலை கணிப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் இது பயன்படுத்தப்பட்டு சமூக நலனினும் பங்களிக்க உள்ளது.
இந்த சூப்பர் கணினிகள் மூலமாக இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக வடிவமைக்கப்பட உள்ளது. பரம் ருத்ராவின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மேம்பாடு, இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.