மதுரையைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சிக்கா என்கிற சிக்கந்தர், மற்றொரு டிக்டாக் பிரலபம் சூர்யாதேவியால் தாக்கிய வழக்கில், சூர்யாதேவி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சூர்யாதேவி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
உடனே விரைந்த காவல்துறை தூக்குக் கயிற்றுடன் சொகுசாக தூங்கிக் கொண்டிருந்த சூர்யாதேவியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைந்தனர்.
இதையடுத்து, டிக்டாக் பிரபலங்கள் சூர்யாவும், சிக்கந்தரும், சூர்யாதேவி மீது தாங்கள் அளித்துள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளனர்.
தூக்குக் கயிறை மாட்டி தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூர்யாதேவியை காப்பாற்ற போலீஸார் வந்து கதவை உடைத்த போது அவர் தற்கொலைக்கான எல்லா பிளானையும் செய்து விட்டு கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
சூர்யாதேவி இவர் டிக்டாக்கில் வீடியோக்களை போடுபவர். வாய்க்கு வந்ததை பேசி நாவடக்கம் இல்லாமல் அனைவரையும் வசை பாடி வம்பிழுப்பது இவரின் வாடிக்கை.
வாயை கொடுத்து ஒரு வம்பில் மாட்டிக்கொண்ட சூர்யா தேவி ஒரு புகாரின் அடிப்படையில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முழுவதும் வீடியோ போடாமல் அடக்கமாக இருந்தார்.
2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது நடிகை வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்து கொண்டனர். இதை கண்டித்து தினந்தோறும் வீடியோ போட்டு வம்பை விலை கொடுத்து வாங்கி கொண்டிருந்தார்.
வனிதா திருமணத்தை எதிர்த்தும் பீட்டர் பாலின் மனைவி ஹெலனுக்கு ஆதரவாகாவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து வனிதா காவல் துறையிடம் புகார் அளித்தார். மீண்டும் சூர்யாதேவி சிறைக்கு சென்ற நிலையில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பிரச்சனை மேல் பிரச்சனையில் சிக்கி வந்த சூர்யா தேவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஒரு வீடியோவை போட்டு மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். அதில் தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்காக அனைத்தையும் தயார் செய்துவிட்டு வீடியோவை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து சூர்யா தேவி வீட்டை தேடி காவல்துறை வந்தனர். அப்போது உள்பக்கமாக தாழிட்டிருந்த அவரது அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காததால் போலீஸார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று போய் பார்த்தனர்.
அப்போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தூக்கிட்டு கொள்ள கயிற்றை தயார்படுத்திவிட்டு கட்டிலில் சூர்யாதேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை எழுப்பி போலீஸார் எச்சரித்தனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரையும் அவரது குழந்தைகளையும் அவரது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸார் ஒப்படைத்தனர். இது போல் நள்ளிரவில் இவர் போட்ட நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















