ஜெய் பீம் திரைப்படம், தற்போது மிகபெரும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. அப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்தது.மேலும் அச்சமுதாய அமைப்புகள் தனித்தனியாக போர்க்கொடி துாக்கி வநபோராட்டங்கள் நடத்தின.
மேலும் இப் படம் உண்மையான கதைக்களம் இல்லை என உண்மை நாயகியான பார்வதி கூறியுள்ளார்.ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் சூர்யா, இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அந்த படக்கதையின் உண்மை நாயகியான பார்வதி. மேலும், தாங்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் பார்வதி மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.இதுவும் தற்போது சர்சைக்குள்ளாகி உள்ளது .
ஜெய் பீம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு, ஒன்பது கேள்விகளை முன்வைத்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓர் கடிதம் எழுதினார். ‘கொலை செய்த காவல்துறை அதிகாரி அந்தோணிசாமி பெயரை மறைத்து குருமூர்த்தி என வைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்’ என, சூர்யாவுக்கு கெடு விதித்தார்.
சூர்யாவும், அன்புமணிக்கு எழுதிய பதில் கடிதத்தில், ‘பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்’ என, அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார். இருவரின் அறிக்கை மோதல் தீவிரமாகி உள்ளது. ‘இருவரிடம் சமரச பேச்சு நடத்த முன் வரவேண்டும்’ என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆனால், சீமான் ஆலோசனையை சூர்யா பொருட்படுத்தவில்லை.
மேலும் சூர்யாவுக்கு தி.க திருமா போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வன்னியர் சமுதாயத்தில் பிரிந்து கிடந்த அனைத்து அமைப்புகளும், அன்புமணிக்கு ஆதரவு அளித்துள்ளன;மேலும் சூர்யாவுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன!சூர்யா நடிக்கும் படங்கள் இனி வட தமிழகம் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் இனி திரையிடுவதில்லை என திரையரங்குகள் முடிவெடுத்துள்ளார்கள்.
இனி சூர்யாவை வைத்து படம் எடுத்தால் அதை தமிழ்கத்தில் படப்பிடிப்பு நடக்கவிடமாட்டோம் என வன்னிய அமைப்புகள் கூறியுள்ளது. இனி தயாரிப்பாளர்களும் சூர்யாவை வைத்து படம் எடுக்க முன்வருவதாக இல்லை. சூர்யா மட்டுமல்ல அவரின் குடும்பத்தினர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் இதே கதி தான் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவுக்கு வன்னியர்கள் மட்டும்மல்ல பல்வேறு இந்து அமைப்புகள் சாதிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளது.இனி சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் திரை உலகம் கை கழுவும் நிலைக்கு சென்றுவிடும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















