நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?

நள்ளிரவு 11 மணி அளவில் பிரதமர் மோடி அவருடைய இல்லத்தில் வை த்து சுவேந்து அதிகாரியை சந்தித்து இருக்கிறார்.பிரதமர் நள்ளிரவில் ஒரு மாநில எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசுவது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல.சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து இருக்கிறார்.அதோடு மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தாவை சந்தித்து பேசி இருக்கிறார் எனவே சுவேந்து அதிகாரியின் டெல்லி விஜயம் கட்சி சம்பந்தப்பட்டது அல்ல.ஆக மேற்கு வங்காளத்தில் ஏதோ ஒன்று நடைபெற இருக்கிறது. அது என்ன? இதுதான் டெல்லி வட்டாரத்தில் தற்போதைய ஹாட் நியூஸ். இதை தொடர்ந்து பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி உள்ளார் மம்தா பானர்ஜி. எதிரும் புதிருமாக இருந்த மம்தா தற்போது சமாதனம் பேச வருகிறார். பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட பங்கேற்காத மம்தா இப்போது அடி பணிகிறார் என்றால் அது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெறி ஆட்டம் தான் காரணம்.

“மோதி என் பிரதமரில்லை” என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி , அதே பிரதமர் மோதிக்கு ‘நட்பின் அடிப்படையில்’ மேற்குவங்க மாம்பழங்கள் அனுப்பி வைத்தார். இதற்கு காரணங்கள் இதோ கூடுதல் செய்தி: மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகளையடுத்து நடந்த வன்முறைகளில் 15000 வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது . பாஜகவினர் கொல்லப்பட்டனர், பெண்கள் / சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர், அவர்கள் சொத்துகள் கொளுத்தப்பட்டன. இவை அத்தனையும் காவல்துறை மேற்பார்வையுடன் நடந்தது. 7000 பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டார்கள்.

எனவே அங்கே மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை கலைத்து, ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும். காவல்துறை சரியில்லாததால், மத்திய காவல் படையை பணியில் அமர்த்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.” – என உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுக்கள் கொடுத்திருந்ததில், ரஞ்சனா அக்னிஹோத்திரி – ஜிதேந்தர் சிங் ஆகியோர் தொடுத்த மனுவை விசாரிக்க எடுத்துக் கொண்டது

அந்த அமர்வு, மத்திய அரசு – மேற்குவங்க அரசு – தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றுக்கும் பதிலளிக்க சொல்லி கேட்டிருக்கிறது. வழக்கில் மம்தா அவர்களை சேர்த்திருந்தாலும், மம்தாதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்பது சிறப்பு.

இந்த சம்பவம் குறித்து, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. இக்குழு ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் நேற்று வழங்கியது அந்த அறிக்கையில் மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர். 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். என கூறப்பட்டுள்ளது.

இன்று மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.சுவேந்து அதிகாரி சந்திப்பு உச்சநீதிமன்றம் வழக்கு பிரதமர்க்கு நட்பின் அடிப்படையில் மாம்பழம் அனுப்பிய மம்தா.. மேற்கு வங்கத்தில் இனி ஆட்சி எவ்வாறு நடக்கும் என்பதை மம்தா தான் முடிவு செய்ய வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியா? இல்லை திரிணாமுல் ஆட்சியா என்பதை.

Exit mobile version