கடந்த சில நாட்களாக ஸ்வீடன் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். இந்தியாவைப் போல அல்லாமல் ஸ்வீடன் ஒரு பணக்கார ஐரோப்பிய நாடு. இயற்கையழகும், செல்வமும், அமைதியும் கொட்டிக் கிடக்கும் ஸ்கேண்டிநேவிய நாடுகளில் ஒன்று. ஸ்வீடிஷ் குடிமக்கள் மிக அமைதியானவர்கள். அவர்களின் வரலாற்றில் வன்முறைகள் எதுவும் இருந்ததில்லை.
பெரும்பாலான ஸ்வீடிஷ் குடிமக்கள் அடுத்தவர்களின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர்கள். அதற்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் எதுவுமில்லாத நாடு. பொதுவில் ஸ்வீடிஷ் குடிமகனுக்கு மாண்ட பிறகு கிடைக்கிற சொர்க்கம், நரகத்தில் எல்லாம் நம்பிக்கையில்லாத, முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்
அப்படிப் பட்ட ஸ்வீடன் இன்றைக்குக் கந்தலாகிக் கிடக்கிறது. அங்கு நடந்த, நடக்கும் நிகழ்வுகள் நம்பவே இயலாதவை. இப்படியும் ஒரு அப்பாவி தேசமா என்று வியக்க வைக்கிறது ஸ்வீடன். அதிகாரத்தில் இருக்கும் அந்த நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சொந்த நாட்டை வேண்டுமென்றே தங்களின் சுய நலத்திற்காகக் கந்தலாக்கிவிட்டார்கள். அத்தனையும் அதிகாரத்திற்காக. பதவிக்காக.
ஐரோப்பில் அமைதி பூங்காவாக திகழும் நாடுகளில் ஒன்று ஸ்வீடன். அங்கே வெள்ளிக்கிழமை குரான் அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்ததில் இருந்து கலவரம் வெடித்தது. ஏராளமான மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இந்த நேரத்தில், போராட்டக்காரர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். சிலரை கைது செய்துள்ளனர்.
ஸ்வீடனின் தேசியவாத கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவர் ராஸ்மஸ் பலுதான் வியாழக்கிழமை மால்மோ நகரில் ‘நோர்டிக் நாடுகளில் இஸ்லாமியமயமாக்கல்’ குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்தார். இருப்பினும், சட்டம் மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு ராஸ்மஸ் பலுதானிற்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாக நகரத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதனால்,கோபமடைந்த ஆதரவாளர்கள், வெள்ளிக்கிழமை, அவரது ஆதரவாளர்கள் குர்ஆனின் சில நகல்களை மால்மோவில் உள்ள ஒரு சாலையில் வைத்து எரித்தனர்.குரானை எரித்ததால் கோபம் கொண்ட இஸ்லாமிய சமூகத்தினர், நகரையே தீ வைத்து வன்முறை போராட்டத்தில் இறங்கினர்.
வடக்கு ஐரோப்பாவில் சில நாடுகள் நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கும். இந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவு. உலகில் சமீபத்திய வன்முறைகளில் லட்சக்கணக்கான அகதிகள் இந்த நோர்டிக் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதில் போலந்தைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஏராளமான முஸ்லிம் மக்களுக்கு புகலிடம் அளித்துள்ளன.
அகதிகளாக சென்றவர்கள் இன்று நகரினை தீக்கரை ஆக்கியுளளது மிகப்பெரிய அந்தநாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















