தப்லிகி ஜமாத் சந்திப்பு-கொரோனா தொற்றின் அதிவேக பரவல் !! மாநாட்டில் கலந்து கொண்ட 10 இந்தோனேசியர்கள் கைது

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, வுஹான் கொரோனா வைரஸ் பிடியில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 10 இந்தோனேசியர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்த நிலையில் அவர்களை உரிய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவின் கிழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 பேர் கொண்ட தப்லிக் ஜமாத் உறுப்பினர்களில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார், அவர்கள் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 29 ஆம் தேதி முதல் மும்பையின் பாந்த்ரா மேற்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி பாந்த்ராவில் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் தங்கியிருப்பது குறித்து போலீசாருக்குத் தெரியவந்தது. இது குறித்து அதிகாரி கூறியதாவது “பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் அவர்கள் இரண்டு குழுக்களாக இந்தியாவுக்குச் வந்ததையும், பிறகு நிசாமுதீன் சபையில் கலந்துகொண்டதையும் நாங்கள் கண்டறிந்தோம் “

நகரத்தில் வைரஸ் பரவுவது குறித்து எச்சரிக்கை எழுப்பிய நிலையில், மார்ச் 7 அன்று தப்லிகி உறுப்பினர்கள் மும்பைக்கு வந்திருந்தாலும், அவர்கள் மார்ச் 29 அன்று ஒரு குடியிருப்பில் பதுங்கிய நிலையில், நடுவில் 22 நாட்கள்(அதாவது மார்ச் 7 – மார்ச் 29) அவர்கள் நகரத்தை சுற்றித் திரிந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவர்களின் மருத்துவ பரிசோதனையின் போது, ​​12 பேர் கொண்ட குழுவில் இரண்டு உறுப்பினர்களுக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மீதமுள்ள 10 நபர்களை 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து புதன்கிழமை (ஏப்ரல் 22),இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழுள்ள பிரிவு 188 (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமை),
பிரிவு269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை பரப்புவதற்கான கவனக்குறைவான செயல்) மற்றும் பிரிவு 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள வீரியம் மிக்க செயல்) கைது செய்யப்பட்டு ஏப்ரல் 23 ம் தேதி அவர்கள் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாந்த்ரா காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக தலைநகரான மும்பை, சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் “ஹாட்ஸ்பாடாக” உருவெடுத்ததோடு, கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பெருநகரத்தில் உள்ள 5407 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 204 பேர் கொரோன தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தப்லிகி ஜமாத் சந்திப்பு-கொரோனா தொற்றின் அதிவேக பரவல் !!

மார்ச் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் தப்லிகி ஜமாத்தின் தாக்கம் தெரியத்தொடங்கியது. வுஹான் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சுமார் 200 பேர் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மார்க்காஸ் நிஜாமுதீன் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மார்க்கஸ் நிஜாமுதீனைச் சுற்றியுள்ள பகுதி டெல்லி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. இதை அடுத்து நாடு முழுவதும், தப்லிகி ஜமாத் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியத்தொடங்கியது. இஸ்லாமிய மிஷனரி அமைப்பின் விதிமீறல்களால் நாடு திகிலடைந்தது.

இதை தொடர்ந்து, இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது தெரியவந்தது, மார்ச் 22 ஆம் தேதி வரை, 2500 பேர் மார்கஸ் நிஜாமுதீனின் வளாகத்தில் இருந்தனர், மார்ச் 23 அன்று அவர்களில் 1500 பேர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். எனினும், மார்ச் 24 ஆம் தேதி நிலவரப்படி சுமார் 1000 பேர் தப்லிகி ஜமாத்தின் உலகளாவிய தலைமையகத்தில் சிக்கியுள்ளனர். அப்போதிருந்து, ஜமாத்தின் உறுப்பினர்கள் ஒத்துழைக்காமலும் கொடூரமான நடத்தை போன்ற செயல்களால், நிர்வாகத்தினருக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் கடும் சவாலாக நிலவியது குறிப்பிடத்தக்கது.

நன்றி : வலதுசாரி சிந்தனையாளர்

https://www.opindia.com/2020/04/mumbai-tablighi-jamaat-coronavirus-bandra-indonesia-markaz-nizamuddin/

Exit mobile version